மேலும் அறிய

மணிப்பூரில் என்னதான் நடக்கிறது? பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா..!

மணிப்பூரில் நிலவி வரும் சூழல் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கினார். ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து சென்ற பிரதமர், தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இந்தியா திரும்பினார்.

மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

இதை தொடர்ந்து, மோடியை சந்தித்து அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக, மணிப்பூரில் நிலவி வரும் சூழல் குறித்து விளக்கம் அளிக்க, நேற்று, டெல்லிக்கு சென்ற அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங், அமித் ஷாவை சந்தித்து பேசினார். மாநில மற்றும் மத்திய அரசுகளால் வன்முறையை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்தது என பைரன் சிங் அமித் ஷாவிடம் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தது குறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட பைரன் சிங், "டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து, மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினேன். அமித் ஷாவின் தீவிர கண்காணிப்பின் கீழ், மாநில மற்றும் மத்திய அரசு கடந்த வாரத்தில் வன்முறையை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது" என பதிவிட்டார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகு வன்முறை காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அமைதியை அடைவதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துமாறு அமித் ஷா அறிவுறுத்தினார். 

அனைத்து கட்சி கூட்டம்:

மேலும், அமைதி நிலவுவதை உறுதிசெய்ய மணிப்பூரில் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார். என்னுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித்ஸ்வராஜ், ராஜ்யசபா எம்பி மகாராஜா மற்றும் சபாநாயகர் சத்யபிரதா சிங் ஆகியோர் வந்திருந்தனர்" என்றார்.

அனைத்து கட்சி கூட்டத்தில், 18 அரசியல் கட்சிகள், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் மற்றும் இரண்டு முதலமைச்சர்கள் மூன்று மணி நேரம் நீடித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஆறு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சதிச் செயல் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பதை ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து ஒரு மாதமாக நடந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

இதுவரை கலவரம் தொடர்பாக மொத்தம், 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget