மேலும் அறிய

‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!

தீண்டாமை.... நீ தொட்ட பொருளை யாருடா தொடுவா.... கொடுமையின் உச்சம்... “என் கஷ்டம் உனக்கு புரியாது” என்று ஒற்றை வார்த்தையில் ஏளனத்தை புறந்தள்ளிச் செல்வார் புரட்சியாளர் அம்பேத்கர். 

தீண்டாமை.... நீ தொட்ட பொருளை யாருடா தொடுவா.... கொடுமையின் உச்சம்... “என் கஷ்டம் உனக்கு புரியாது” என்று ஒற்றை வார்த்தையில் ஏளனத்தை புறந்தள்ளிச் செல்வார் புரட்சியாளர் அம்பேத்கர். 

'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி என்னவென்றால் மலைபோல் எங்கள் மீது சுமத்திய இன்னல்களும் அநீதிகளும்தான்.. யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’ இது அம்பேத்கரின் வலிமிகுந்த வாங்கியங்கள்... 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துவத்தை ஓங்கி ஒலிக்கச் செய்தவர். கற்பி, ஓன்று சேர், புரட்சி செய் என்பதுதான் அவரின் அறிவுரை. கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும் ஆடுகளைத்தான் கோயில்கள் முன்பாக பலியிடுவார்கள், சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாய் இருங்கள் என்று போதித்தவர் அம்பேத்கர். 

‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் மாஹூ என்ற பகுதியில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் தம்பதியினருக்கு 14வது குழந்தையாய் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். 

1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும்.[9] வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

1904 ஆம் ஆண்டு இவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. சில நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்தது. அதை பிடித்து படிப்பில் கவனம் செலுத்தி முன்னேறிக்காட்டினார் அம்பேத்கர். 

‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!

மன்னர் ஒருவர், அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையையும் உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அம்பேத்கர் பெற்றார். அங்கு 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு டாக்டர் பட்டமும் பெற்றார். 

சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து முனைவர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார். இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. அல்லும் பகலும் உழைத்து நாடே போற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். 8 அட்டவணைகளை கொண்ட இந்தச் சட்டம், 1949ஆம் ஆண்டு ‌நவம்பர் 26ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!

1930-ல் இலண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். 

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காந்தியையே எதிர்த்தவர் அம்பேத்கர். அம்பேத்கர் பெற்றுத்தந்த இரட்டை வாக்குரிமையை காந்தி எதிர்த்தார். அதனால் இருவருக்குமிடையே புனே ஒப்பந்த ஏற்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. 

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப இவர் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது” எனத் தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல், உண்ணாவிரதம் எனும் ஆயுதம் சக்தி வாய்ந்ததுதான்; ஆனால் அதை அடிக்கடி எடுக்காதீர்கள் மழுங்கிவிடும் என காந்தியிடம் நேரடியாகவே தெரிவித்தார். 

யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல அம்பேத்கரும் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் தோல்வியை கண்டுள்ளார். அது பாலியல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட வழக்கு. இது "சமாஜ் ஸ்வாஸ்த்ய (சமூக ஆரோக்கியம்)" என்ற பத்திரிகைக்காக வாதாடப்பட்ட ஒரு வழக்கு. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரகுநாத் தோண்டோ கர்வே தனது "சமாஜ் ஸ்வாஸ்த்ய" பத்திரிகையில் வெளியான கருத்துகளுக்காகப் பழமைவாதிகளின் அதிகாரத்தால் கைது செய்யப்பட்டார்.  1931 ஆம் ஆண்டில், முதன்முதலில் புனேவில் உள்ள ஒரு பழமைவாதக் குழு, இவரின் "விபச்சாரம் பற்றிய கேள்வி" என்ற கட்டுரையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது. இதனால் கர்வேவுக்கு ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1934 இல் மீண்டும் கர்வே கைது செய்யப்பட்டார். இந்த முறை கர்வேவுடன் அம்பேத்கர் வழக்கறிஞராக வாதாடினார். 

‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!

பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 24, 1934 வரை, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதி மேத்தா முன் விசாரணை நடைபெற்றது. கர்வேக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டு பாலியல் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஒழுக்கக்கேட்டைப் பரப்புகிறார் என்பது. ஆர்.டி. கர்வே மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் 1934 ஆம் ஆண்டு நடந்த வழக்கில், நீதிமன்றத்தில் தோல்வி கண்டனர். 

1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 1955ம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. ‘புத்தரும் அவரின் தம்மாவும்' என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ஆம் தேதி டில்லியிலுள்ள அவரது வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது. மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.

‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!

அம்பேத்கர் குறித்து பேராசிரியர் தல்வி, கூறுகையில் "அம்பேத்கர் தலித் சமூகத்தினர் மற்றும் வஞ்சிக்கப்பட்டோரின் தலைவராகத் தான் இருந்தார் என்றாலும், அவர் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவும் சிந்தித்துக் கொண்டிருந்தார். அனைத்து வகுப்புகளையும் உள்ளடக்கிய ஒரு நவீன சமூகம் தான் அவருடைய கனவாக இருந்தது. அவர் அந்த திசையில் பயணித்துக் கொண்டிருந்தார். " என்கிறார். 

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனையோ அம்பேத்கர்கள் பிறந்தாலும் எங்கிருந்தோ அந்த தீண்டாமையும் அடக்குமுறையும், அதிகாரத்தன்மையும் மேலோங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதிகாரத்திமிர் மேலோங்கும்போது “சார் சட்டப்படி தப்பு சார்” என்று ஒரு பாமரனை சொல்ல வழி வகுத்த பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.... 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget