Broadcasting Rule: அனைத்து சேனல்களும் 'தேச நலன்' சார்ந்து 30 நிமிடங்கள் தினசரி ஒளிபரப்ப மத்திய அரசு அதிரடி உத்தரவு; கூடுதல் விவரம்..
ஜனவரி 1, 2023 முதல் அனைத்து இந்திய சேனல்களும் 'தேச நலன்' சார்ந்து 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Broadcasting Rule: அனைத்து சேனல்களும் 'தேச நலன்' சார்ந்து 30 நிமிடங்கள் தினசரி ஒளிபரப்ப மத்திய அரசு அதிரடி உத்தரவு; கூடுதல் விவரம்.. All Indian Channels To Air 30 Mins of 'National Interest' Content From Jan 1, 2023 Sports, Foreign Exempted said ministry of information and broadcasting Broadcasting Rule: அனைத்து சேனல்களும் 'தேச நலன்' சார்ந்து 30 நிமிடங்கள் தினசரி ஒளிபரப்ப மத்திய அரசு அதிரடி உத்தரவு; கூடுதல் விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/21e951562f54cf25c59efaa599b78dee1669621095218571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நவம்பர் மாத தொடக்கத்தில் மத்திய அமைச்சகம் 'இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கு வழிகாட்டுதல்கள் தொடர்பாக ஒப்புதல் ஒன்றை அளித்தது, இந்த விதிகள் நவம்பர் 9 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், இதன் கீழ் மேலும் ஒரு புதிய விதி முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும்:
அதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தினமும் குறைந்தது 30 நிமிட நிகழ்ச்சிகளை, அனைத்து தனியார் சேனல்களும் ஒளிபரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விதி விளையாட்டு, வெளிநாட்டு மற்றும் வனவிலங்கு சேனல்களுக்கு பொருந்தாது என கூறப்படுகிறது.
இந்த புதிய விதியானது ஜனவரி 1, 2023 முதல், அனைத்து இந்திய சேனல்களும் "தேசிய மற்றும் பொது நலன்" தொடர்பான உள்ளடக்கத்தை தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஒளிபரப்புவது கட்டாயமாகும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புத்தாண்டு தேதியானது, பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு வந்தது என்றும், மேலும் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் மற்றொரு கூட்டத்தில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பொருள்கள்:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருள்கள் பின்வருமாறு: கல்வி மற்றும் கல்வியறிவு பரவல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள் நலன், சமூகத்தின் நலிந்த பிரிவினர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களுக்கு பிறகு சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய வழிகாட்டுதலான "தேசிய மற்றும் பொது நலன்" தொடர்பான கருப்பொருள் தொடர்பான கருத்துக்கள் ஒளிபரப்புவது தொடர்பான அறிவிப்பை, கூடிய விரைவில் மத்திய அரசு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Bisleri: பிஸ்லெரி நிறுவனத்தை டாடா கைப்பற்ற முக்கிய காரணம் இவர்தான்.. யார் இந்த ஜெயந்தி சவுகான்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)