‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
தனக்கு உடைந்த இருக்கையை ஒதுக்கியதற்காக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் கோபத்தை ஏர் இந்தியா எதிர்கொண்டுள்ளது.

உடைந்த இருக்கைகள், தாமதமான விமானங்கள் மற்றும் பல காரணங்களால் விமான நிறுவனங்கள் பெரும்பாலும் பயணிகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்கின்றன.
அதன்படி, தனக்கு உடைந்த இருக்கையை ஒதுக்கியதற்காக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் கோபத்தை ஏர் இந்தியா எதிர்கொண்டுள்ளது.
போபாலில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் உடைந்த இருக்கையை வழங்கியதற்காக டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிர்வாகத்தை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் இது பயணிகளை ஏமாற்றுவது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டாடா பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்ற எண்ணத்தில் தான் இருந்ததாகவும் ஆனால் உண்மை வேறுவிதமாக இருந்தது எனவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
आज मुझे भोपाल से दिल्ली आना था, पूसा में किसान मेले का उद्घाटन, कुरुक्षेत्र में प्राकृतिक खेती मिशन की बैठक और चंडीगढ़ में किसान संगठन के माननीय प्रतिनिधियों से चर्चा करनी है।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 22, 2025
मैंने एयर इंडिया की फ्लाइट क्रमांक AI436 में टिकिट करवाया था, मुझे सीट क्रमांक 8C आवंटित हुई। मैं जाकर…
மேலும், ஏர் இந்தியா நிர்வாகம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்று சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் ஏர் இந்தியா விமான எண் AI436-ல் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு 8C எண் இருக்கை ஒதுக்கப்பட்டது. நான் சென்று இருக்கையில் அமர்ந்தபோது, அது உடைந்திருந்தது. உட்கார சங்கடமாக இருந்தது, உடைந்த இருக்கை குறித்து விமான ஊழியர்களிடம் விசாரித்தேன். இதுகுறித்து நிர்வாகத்துக்கு முன்பே சொல்லிவிட்டதாகவும் அது விற்க பட்டிருக்கக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்” எனத் தெரிவித்திருந்தார்.
அமைச்சருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ஏர் இந்தியா உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மேலும் "எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தது.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான விமான நிறுவனத்திற்கு எதிரான பயணிகள் புகார்களின் வரிசையில், சிவராஜ் சிங் சவுகான் மட்டும் ஏர் இந்தியாவை குறை கூறவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு, செப்டம்பரில், கேபேட்டல் இன்வெஸ்ட்மென்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அனிப் படேல், ஏர் இந்தியாவின் வணிக வகுப்பு சேவையை விமர்சித்தார். 5 லட்சத்திற்கு மேல் செலவிட்டும் சிக்கலான ஹெட்ஃபோன்கள் மற்றும் அசுத்தமான கேபின்கள் உட்பட ஏமாற்றமளிக்கும் அனுபவமே கிடைத்தது எனத் தெரிவித்திருந்தார்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தில் வெற்றி பெற்றது. பின்னர் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விமான நிறுவனத்தை பொறுப்பேற்றது.

