ABP C Voter Survey: குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்? பாஜகவா? ஆம் ஆத்மியா? கருத்துகணிப்பு சொல்வது என்ன?
குஜராத் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஏபிபி-சிவோட்டர்ஸ் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப்,கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை தொடர்ந்து இந்தாண்டு இறுதியில் குஜராத் மற்ரும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் தொடர்பான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இங்கு தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பை ஏபிபி-சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளது. அதில் சில முக்கிய முடிவுகள் வெளியாகியுள்ளன.
#OpinionPollOnABP | Female voters most likely to elect BJP as per ABP CVoter Opinion Poll in Gujarat#KBM2022 #abpcvotersurvey #GujaratOpinionPoll2022 pic.twitter.com/StIxkQFm1B
— ABP LIVE (@abplive) October 2, 2022
குஜராத்தில் யார் ஆட்சி?
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சியில் பாஜக உள்ளது. இந்தச் சூழலில் இந்தாண்டு நடைபெறும் தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி சி வோட்டர்ஸ் கணித்துள்ளது. அதாவது பாஜக இந்தாண்டு சட்டபேரவைத் தேர்தலில் 135 முதல் 143 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி இம்முறை தேர்தலில் 36 முதல் 44 இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி-சி வோட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
வாக்குசதவிகிதத்தை பொறுத்தவரை குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022ல் பாஜக இம்முறை 46.8% வாக்குகள் பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற 41.4% வாக்குகளிலிருந்து சுமார் 9.2 சதவிகிதம் குறைவாக பெற்று 32.3% வாக்குகள் பெறும் என்று கருத்துகணிப்பு கூறுகிறது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 இடங்களில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், தேசிய வாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இருந்தன.
மேலும் படிக்க: ABP C Voter Poll Survey: ஹிமாச்சலப் பிரதேசத்தை ஆட்சியை தக்கவைக்குமா பாஜக? ஏபிபி-சிவோட்டர்ஸ் கருத்துகணிப்பு சொல்வது என்ன?