Aadhaar Card Update: என்னாது.! ஆதார் கார்டை டிச.14க்குள் புதுப்பிக்கவில்லையென்றால், செல்லாதா?
Aadhaar Card Update: ஆதார் கார்டை புதுப்பிக்க கால அவகாசமானது டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் உள்ள அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. வங்கி கணக்கு தொடங்கி, சிலிண்டர் எரிவாயு இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை என அரசின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. இந்நிலையில், ஆதார் கார்டை புதுப்பித்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யார் புதுப்பிக்க வேண்டும்?
ஆதார் அட்டை பதிவு செய்து 10 வருடம் நிறைவு செய்தவர்கள் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம். இந்நிலையில், பல நாட்களாக , அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசிநாள் பல முறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 14 ஆம் தேதி வரை மேலும் கால அவகாசமானது வழங்கப்பட்டுள்ளது.
செயலிழந்து விடுமா?
இந்நிலையில், டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால், ஆதார் அட்டை செயலிழந்துவிடும் என்று தகவலும் பரவி வருகிறது. ஆனால், இது உண்மையில்லை, ஆதார் எண் செயலிழக்காது. இதனால், சில பயன்பாடுகளை பெற முடியாமல் போகலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
மேலும். டிச. 14 க்கு பிறகு புதுப்பிப்போருக்கு ரூ.50 கட்டணம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் , தற்போது இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை அப்டேட் செய்வது எப்படி?
• ஆதார் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI உள்ளே செல்ல வேண்டும்.
• உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் ஒரு முறை மட்டுமே உள்ளே செல்லும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.
• உங்கள் அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தி. தேவையான அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை பதிவேற்றவும்.
• உங்கள் ஒப்புதலை சமர்ப்பிக்கவும்.
ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது எப்படி?
• ஆதார் இணையதளமான UIDAI இணையதளம் உள்ளே செல்ல வேண்டும்.
• பின்னர், அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
• பின்னர் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.
• அங்கே உங்கள் நேரடி புகைப்படம் எடுக்கப்படும்.
• பின்னர், புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுக்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
• இந்த எண் மூலமாக நீங்கள் உங்கள் ஆதார் அட்டை அப்டேட் நிலவரத்த அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், மேலும் ஆதார் அட்டை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அரசின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு ( UIDAI ) சென்று தெரிந்து கொள்ளவும்.