No Tomato : என்னது இனிமே பர்கர்ல தக்காளி போடமாட்டாங்களா? மெக் டொனால்ட்ஸ் எடுத்த அதிரடி முடிவு..
இனி மெக்டானல்ஸ் உணவகங்களில் சில காலத்துக்கு தக்காளி பயன்படுத்தப்படாது என்ற சுற்றறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
McDonald's India - North and East கொள்முதலில் "தற்காலிக" பருவகால சிக்கல் காரணமாக அதன் மெனுவில் இருந்து தக்காளியை சில காலம் பயன்படுத்தப்போவது இல்லை என அறிவித்துள்ளது. இன்று (ஜூலை 7 ஆம் தேதி) வெளியிடப்பட்ட அறிக்கையில், மெக்டொனால்டு இந்தியா - வடக்கு மற்றும் கிழக்கு செய்தி தொடர்பாளர், பருவகால சிக்கல்கள் காரணமாக அதன் மெனுவில் இருந்து தக்காளி நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து வருவது நுகர்வோரை கவலையடைய செய்துள்ளது. சில தக்காளி பயிரிடும் பகுதிகளில் கனமழை மற்றும் ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக வெப்பம் பயிர் உற்பத்தியை பாதித்தது, இதனால் இந்த ஆண்டு விலை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை உயர்ந்தாலும், இந்த ஆண்டு விலை உயர்வு அபரிமிதமாக உள்ளது. இந்நிலையில், மெக்டொனால்டு நிறுவனம் தனது உணவுப் பொருட்களில் தக்காளியை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🚨Mcdonalds,Delhi put up this notice!
— Aditya Shah (@AdityaD_Shah) July 7, 2023
Even Mcdonalds cannot afford tomatoes now!😂😂 pic.twitter.com/cn1LkoQruf
இந்த பதிவை SEBI முதலீட்டு ஆலோசகர் ஆதித்யா ஷா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர்கள் சமையலறையில் பிரதான உணவு இல்லாமல் உணவுப் பொருட்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்ப அலைகள், கனமழை மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் ஆகியவற்றின் கலவையானது நாடு முழுவதும் பல காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தக்காளியின் விலை தலைப்புச் செய்திகளை உருவாக்கி வரும் நிலையில், காலிஃபிளவர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விலைகள் நுகர்வோரின் பட்ஜெட்டை பாதிக்கின்றன.
இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை சில்லரை கடைகளில் 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாரஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரும். தற்போது விளைச்சல் குறைவால் வரத்து குறைந்துள்ளது என்றும் இதனால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.