பூட்டிக்கிடந்த வீடு! உள்ளே 9 பேரின் சடலம்! போலீசாரையே அதிர வைத்த பகீர் சம்பவம்!
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் மஹைசலில் பகுதியில் மாணிக் மற்றும் போபட் யல்லபா வான்மோர் என்ற இரு சகோதரர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர்.
மகாராஷ்ட்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் மஹைசலில் பகுதியில் மாணிக் மற்றும் போபட் யல்லபா வான்மோர் என்ற இரு சகோதரர்கள் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களில் மாணிக் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர்களது வீடுகள் மர்மமான முறையில் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சாங்லி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
Maharashtra | Nine members of a family found dead in Sangli, police investigation underway pic.twitter.com/lGblowncdI
— ANI (@ANI) June 20, 2022
ஒரு வீட்டில் மாணிக், அவரது தாய், மனைவி, இரு குழந்தைகளும், இதேபோல் மற்றொரு வீட்டில் இருந்து போபட், அவரது மனைவி,இரு குழந்தைகள் ஆகியோர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீக்ஷித் கெடம் தெரிவித்துள்ளார். மேலும் இது தற்கொலையாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் உண்மை என்ன தெரிய வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சகோதரர்கள் இருவரும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்றும், அதனை திரும்ப செலுத்த முடியாததால் இந்த குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முயற்சியை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்