நெடுஞ்சாலையில் ஜீப்புடன் லாரி மோதி கொடூர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
கூலி தொழிலாளர்கள் பெங்களூருக்கு ஜீப்பில் வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தின் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். கூலி தொழிலாளர்கள் பெங்களூருக்கு ஜீப்பில் வந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் விபத்து:
நேற்று, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை பகுதியில் சொகுசு பேருந்து மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஆம்னி காரில் பயணித்த சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஆத்தூரை சேர்ந்த ராஜேஷ், சந்தியா, சரண்யா, ரம்யா, சுகன்யா மற்றும் அவரது மகள் 11 வயதான தன்ஷிகா பலியாகினர். மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே இடத்தில் நடந்த மற்றுமொரு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
முழு விவரம் :
ஆத்தூர் வட்டம் துலுக்கனுர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பைபாஸ் மேல்புறம் சுமார் நேற்று இரவு 12:30 மணி அளவில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி TN-NL01B078 சென்ற விஜயலட்சுமி தனியார் பேருந்தும் (ட்ராவல்ஸ்) ஆத்தூர் முல்லைவாடி கிராமத்திலிருந்து வந்த TN 42 U 4717 ஆம்னி வேனும் மோதியதில் ஆம்னி ஆம்னி வேனில் வந்த
1) சரண்யா க .பெ. சுதாகர்(வயது 23)
2) சுகன்யா க.பெ சந்தோஷ் குமார்(வயது 27)
3) சந்தியா த.பெ மயில்வாகனன் (வயது 23 )
4) ரம்யா த.பெ ஆனந்தன் (வயது 25)
5) ராஜேஷ் த.பெ ஆனந்தன் (வயது 21)
ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
6) தன்ஷிகா த.பெ. சந்தோஷ் குமார் (வயது 11)
என்பவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.
மேலும்,
1) சுதா க.பெ மாரிசாமி (வயது 36)
2) பெரியண்ணன் த.பெ பெரியசாமி(வயது 38 )
3) புவனேஸ்வரி த.பெ ஹரிமூர்த்தி (வயது 17)
4) கிருஷ்ணவேணி க.பெ செல்வராஜ் (வயது 45)
5) உதயகுமார் த.பெ சிவகுமார் (வயது 17)
ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி விபத்துக்கு உள்ளானவர்கள் ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் தங்களது உறவினரின் 30 ஆம் நாள் கும்பிடும் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர்.