மேலும் அறிய

Biparjoy Cyclone: நாளை கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல்.. கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..! புயலின் நிலவரம் என்ன?

பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத் கடலோர பகுதிகளில் இருக்கும் 8000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13.06.2023)  வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல்  “பிப்பர்ஜாய், வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று   (14.06.2023)  காலை 08:30 மணி அளவில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார்  280   கிலோமீட்டர் தொலைவில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார்  290   கிலோமீட்டர் தொலைவில்,  போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு-வடமேற்கே சுமார்  340   கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

பிபர்ஜாய் புயல்:

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15.06.2023 அன்று மாலை, மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும்  கராச்சி  (பாகிஸ்தான்) இடையே,  ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு  125-135  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150  கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.

இந்த புயல் கரையை கடக்கும் போது குஜராத் மாநிலத்தின் கட்ச், தேவபூமி, துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காற்றின் வேகம் 135 முதல் 145 கிமீ வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாநில மற்றும் மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஜராத் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் கடலோர பகுதிகளில் இருக்கும் 8000 பேர் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

அரபிக்கடல் பகுதிகள்:

இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்:

14.06.2023 முதல் 18.06.2023 வரை: சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடகிழக்கு அரபிக்கடல்  பகுதிகள்: 14.06.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 145  முதல் 155  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  அதன் பிறகு காற்றின் வேகம் குறைந்து மணிக்கு 125  முதல் 135  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150  கிலோ மீட்டர் வேகத்தில் 15.06.2023 அன்று காலை முதல் மாலை வரை  வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 16.06.2023 அன்று காலை முதல்  மணிக்கு 45  முதல் 55  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: 14.06.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 60  முதல் 70  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 15.06.2023 அன்று காலை முதல் அதற்கடுத்த 12 மணி நேரத்திற்கு   மணிக்கு 40  முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்தியமேற்கு  மற்றும் வடமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்: 14.06.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 45  முதல் 55  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

சௌராஷ்டிரா- கட்ச் கடற்கரை பகுதிகள்: 14.06.2023 அன்று காலை  முதல்  சூறாவளிக்காற்று மணிக்கு 65  முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, 15.06.2023   அன்று காலை  முதல்  நள்ளிரவு  வரை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 125  முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 16.06.2023 அன்று காலை முதல்  மணிக்கு 85  முதல் 95  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 105  கிலோ மீட்டர் வேகத்திலும்,  மாலை முதல் மணிக்கு 50  முதல் 60  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

14.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும்  தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.06.2023: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget