மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இன்றைய தலைப்பு செய்திகள் உங்கள் முன்.. ’ஜில்’ க்ளைமேட்.. ஹாட் டாபிக்ஸ்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
- இன்னாருக்கு இது ஆரியம்; எல்லாருக்கும் எல்லாம் இது திராவிடம்; ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
- அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்; நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு
- மனைவிக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - இயக்குநர் விக்ரமன் உருக்கம்
- போராட்டம் அறிவித்த ஆசிரியர் அமைப்புகளுடன், புதன்கிழமை ( நாளை) அன்று பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
- சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், அபுதாபி, தோஹா, ஷார்ஜா, குவைத் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான சேவை முழுவதுமாக தொடங்கியது.
- விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு 4வது முறையாக வருகின்ற நவம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.
- பிரபல ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா:
- தேசிய ஒருமைப்பாட்டு நாள் என்பது இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2014-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- ஆந்திர ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம் என ரயில்வே அறிவிப்பு; சிக்னலை கவனிக்காமல் ரயிலை ஓட்டியது ஏன் எனவும் தீவிர விசாரணை
- வினாடிக்கு 2600 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு மேலும் 23 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் - ஒழுங்காற்று குழு பரிந்துரை
- கேரளாவில் ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு - சரணடைந்த டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைப்பு
- 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோற்கும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்
உலகம்:
- இஸ்ரேல் தாக்குதலால் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை; காப்பாற்றி விட்டு கதறி அழுத மீட்பு படை வீரர்
- பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குக: இஸ்ரேலை வலியுறுத்தும் அமெரிக்கா!
- ஹமாசின் ராணுவத் திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம் - இஸ்ரேல் பிரதமர் 25வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குகிறது.
விளையாட்டு:
- உலகக் கோப்பை 2023: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்கிறது பாகிஸ்தான் அணி
- உலகக் கோப்பை தொடர் தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் ராஜினாமா.
- உலகக் கோப்பை 2023: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.
- பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியில் சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion