மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இதுதான் ஹாட் & டாப் நியூஸ்.. உங்களுக்காக இதோ இன்றைய தலைப்பு செய்திகள்..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம் தகவல்
- நான் பதிவு பண்ணினால் பண்ணியதுதான்; பிரதமர் மோடியை திட்டியதையே இதுவரை டெலிட் செய்யவில்லை - நடிகை குஷ்பு பேட்டி
- கடந்த வாரம் சென்று வந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லிக்கு அவசர பயணம்
- வடநாட்டு கைக்கூலி என்பதற்கு ஆதாரம் உள்ளது - அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
- சென்னையில் நவம்பர் 27ஆம் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கார்த்திகை தீப திருவிழா இன்று; நேற்று முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
- கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் பெண்களிடம் தேவையற்ற விவரங்களை சேகரிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு காவல்துறை செம்மையாக பணியாற்ற பொதுமக்களின் கருத்துகளை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
இந்தியா:
- பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி; ராஜஸ்தானில் 68% வாக்குப்பதிவு - 4 இடங்களில் மோதல், துப்பாக்கிச்சூடு
- சுரங்க இடிபாடுகளில் சிக்கி துளையிடும் கருவி உடைந்தது ; 41 தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்: உள்நாட்டு உற்பத்தி திறன் மீதான நம்பிக்கையை அதிகரித்ததாக பெருமிதம்
- கொச்சி பல்கலைக்கழத்தில் நெரிசல் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு; 64 பேர் மருத்துவமனையில் அனுமதி
- கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
- சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- குஜராத் அருகே சம்பள பாக்கி கேட்ட பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்:
- ஆஸ்திரியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு.
- குழந்தைகளின் கல்விக்காக லெபனானுக்கு ரூ.33 கோடி நிதியுதவி வழங்கிய பின்லாந்து.
- ஸ்பெயின், பெல்ஜியம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு பேச்சு - பிரதமர்களுக்கு இஸ்ரேல் கண்டனம்
- இந்து மத விழுமியங்களால் தான் உலகில் அமைதி நிலைநாட்டப்படும் என, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பேசியுள்ளார்.
- முதன்முதலாக, விண்வெளியில் இருந்து சுமார் 16 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பூமிக்கு லேசர் ஒளி வந்துள்ளது.
விளையாட்டு:
- அண்டர் 19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
- இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
- ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகினார் ஜோ ரூட்
- 2032 ஒலிம்பிக்கிற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான பிரிஸ்பேன் கிரிக்கெட் ஸ்டேடியம் இடித்து மீண்டும் கட்டப்பட உள்ளது.
- ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்ட்யா, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion