மேலும் அறிய

7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • இன்று சேலத்தில் திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கின்றனர்.
  • ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்; 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்.
  • போக்குவரத்துத்துறௌ மீண்டும் எச்சரிக்கை; ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் அனுமதி இல்லை
  • 6  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு
  • இந்திய அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி - அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.
  • சென்னையில் இன்று (ஜனவரி 21ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
  • புதிய 100 பிஎஸ் 6 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
  • பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.
  • தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்தியா: 

  • ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்த மகாராஷ்டிர அரசின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • இந்திய - மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி
  • சட்டவிரோத சுரங்க அனுமதி பணமோசடி வழக்கு; ஜார்க்கண்ட் முதலமைச்சர் சோரனிடம் அமலாக்கத்துறை நேரில் விசாரணை
  • ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும் - தேர்தல் ஆணையம் கருத்து
  • அசாம் மாநிலத்தில் பதற்றம்; ராகுல் யாத்திரை வாகனங்கள் உடைப்பு - பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
  • ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில், தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி உயிரிழந்தார்.
  • விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, நேற்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.

உலகம்: 

  • சிரியாவில் இஸ்ரேல் விமான தாக்குதல்; ஈரான் ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழப்பு
  • காலிஸ்தான் பயங்கரவாதியை கொல்ல முயற்சி; இந்தியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி - செக் குடியரசு நீதிமன்றம் தீர்ப்பு
  • சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • அமெரிக்காவில் 74 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்த ஜோ பைடன்

விளையாட்டு: 

  • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
  • ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் டாடா நிறுவனமே கைப்பற்றியது.
  • இந்திய டென்னிஸ் வீராங்கனையிடம் இருந்து விவாகரத்து பெற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்துள்ளார்.
  • ப்ரோ கபடி லீக் போட்டியில் பழி தீர்க்கும் முனைப்பில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Embed widget