மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து தீர்மானம்.. வெற்றி துரைசாமியின் உடல் தகனம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- சிவில் கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்; குழந்தை பெற்ற மறுநாளில் தேர்வு எழுதி ஸ்ரீபதி சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கோயம்பேடு பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது - ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
- கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனைய விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு - எடப்பாடி பழனிசாமி கடும் மோதல்
- எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சனை; எடப்பாடி அருகே ஆர்.பி.உதயகுமாருக்கு இடம் - முதலமைச்சர் கூறியதை ஏற்று சபாநாயகர் அறிவிப்பு
- அரசால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றார் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்; விதிகளை மீறி துணைவேந்தர் அனுமதி வழங்கியதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டு
- உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம்; மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை - திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்.
இந்தியா:
- வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் 'பிரதமர் சூர்யா கர்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
- விவசாயிகளின் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
- விவசாயிகளின் பேரணி தொடங்கியுள்ளதை அடுத்து, இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி வந்த போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
- லட்சக்கணக்கில் விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் முற்றுகை; டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு - 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது
உலகம்:
- துருக்கி தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு: 9 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர்.
- ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது - இஸ்ரேல் தகவல்.
- அபுதாபியில் முதல் இந்து கோயிலை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
- அபுதாபியில் யு.பி.ஐ பயன்பாட்டை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.
- பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை தவிர பிற கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
- ஏமனில் கண்ணிவெடியில் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு, 4 பேர் காயம்
விளையாட்டு:
- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கம் ரத்து.
- ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கரால் நிரப்ப முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
- ICC Player Of The Month என்ற விருதை வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இளம் வீரர் ஷமர் ஜோசப்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் நேற்று காலை பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
- ப்ரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை இன்று எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion