மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஆங்காங்கே கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. இன்றைய தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- இன்று (15.11.23) சென்னை மாவட்டம் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தகவல்
- விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று (15.11.2023) வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சியில் பைக்கில் வீலிங் செய்தும், பட்டாசுகளை கொளுத்தியபடியும் ஓட்டிய ஏழு நபர்களின் ஓட்டுநர் உரிமங்களை தகுதியிழப்பு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு.
- சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
- சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று காலை 8.30 மணி வரை கனமழை அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் நேற்று கேட்டறிந்தார்.
- விளையாட்டு பாட வேளையை கடன் வாங்குவதை கைவிடுங்கள் -ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
- வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- மழை விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
இந்தியா:
- தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி விவரத்தை இன்றைக்குள் தர கெடு; அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம்
- மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக பண மோசடி; நமீதா கணவர், பாஜக நிர்வாகியை கைது செய்ய காவல்துறை தீவிரம்
- சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் தனது, 75வது வயதில் உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
- சாதியை வைத்து அரசியல் செய்யமாட்டேன், ஆனால் என் சாதிய மறைக்க விரும்பல" - மனம் திறந்துள்ள சரத் பவார்
- டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
- தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- இஸ்ரேல் பணய கைதிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் 2.9 லட்சம் பேர் பேரணி நடத்தினர்.
- பயங்கரவாதிகளின் நிதி வழிகளை தகர்க்க நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- உக்ரைனுக்கு எந்த ஆயுதங்களை வழங்கவில்லை என்பதை இஸ்லாமாபாத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
- இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
- காசாவில் உள்ள மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- இந்தியாவும் நியூசிலாந்து அணியும் உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ள நிலையில் போட்டியை காண சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்.
- ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கித்தொடர்: இந்திய அணி அறிவிப்பு.
- உலகக் கோப்பை அரையிறுதி போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.
- ஜெய்ஷாவின் அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது என இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion