மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உதயமானது உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை.. இதோ! உங்களுக்கான இன்றைய தலைப்பு செய்திகள்!
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம்: உலகம் தமிழர்கள் அனைவரும் உற்சாக பொங்கலிட்டு சூரிய பகவானை வழிப்பட்டு வருகின்றனர்.
- ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள் - முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து
- தமிழ்நாடு ஆளுநர் என கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆர்.என்.ரவி
- பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 27ம் தேதி முதல் நடைபயணம் - நடிகை காயத்ரி ரகுராம் அதிரடி அறிவிப்பு
- பொங்கல் பண்டிகை- உலகப்புகழ் பெற்ற அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர், ஈரோட்டில் சேவல் சண்டை நடத்தலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாடு அமைச்சர்கள், எம்பிக்கள் நேரில் மனு; ஆளுநர் ஆர்.என்.ரவு மீதான புகாரை உள்துறைக்கு அனுப்பினார் குடியரசு தலைவர்
- பொங்கல் திருநாளையொட்டு காவல்துறை சீருடைப்பணியாளர்கள் 3,184 பேருக்கு பதக்கங்கள் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் தமிழ்நாடு பொது சுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒரு பகுதியாக "TN நலம் 360" என்ற யூ டியூப் சேனலை உருவாக்க - அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
- பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா:
- அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறும்- அமர்த்தியா சென் கருத்து.
- பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையத்தில் இருந்து இன்றுமுதல் விமான சேவை.
- புதிய தேசிய கல்விக்கொள்கை, சர்வதேச அளவில் மாணவர்களை ஈர்க்கும் - மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார்.
- கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் 17 ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி சந்திக்கும் பரிக்ஷா பே சார்ச்சா ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
- பஞ்சாப்பில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
உலகம்:
- சர்வதேச உறவுகளில் வெளிப்படையான உரையாடல் மற்றும் பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருவதை காண்கிறோம் என உஸ்பேகிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார்.
- அரசு விதித்த நெறிமுறைகளை பின்பற்றாததால் முக்கிய தரவுகள் அடங்கிய ஆவணம் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மியான்மரில் தேவாலயங்கள் மீது வான்தாக்குதல்; 5 பேர் பலி
- இலங்கைக்கு வரும் இந்தியர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுரை
- சீனாவில் ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் பலி
விளையாட்டு:
- இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா.. கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்
- உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்.
- பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
- ரிஷப் பண்ட் இந்தாண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion