GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Nirmala Sitharaman: 53வது ஜி.எஸ்.டி கூட்டத்தின் முடிவில் பால் கேன்களுக்கும் 12% ஜி.எஸ்.டி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். .
அனைத்து வகை பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரியும், மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கும் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
53வது ஜி.எஸ்,டி கூட்டம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
#WATCH | On the 53rd GST Council Meeting, Union Finance Minister Nirmala Sitharaman says, "Council recommended to prescribe a uniform rate of 12% on all milk cans meaning steel, iron, aluminum which are irrespective of the use. They are called milk cans but wherever they are used… pic.twitter.com/csf4Nmx2n3
— ANI (@ANI) June 22, 2024
இக்கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "எஃகு, இரும்பு, அலுமினியம் போன்றவைகளில் அடைக்கப்பட்ட அனைத்து வகை பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியான 12% வரி விகிதத்தை கவுன்சில் பரிந்துரைத்தது. இந்த விகிதத்தில் எந்த சர்ச்சையும் ஏற்படாத வகையில் பயன்படுத்தப்படும். அனைத்து அட்டைப்பெட்டிகள் காகிதம் அல்லது காகிதப் பலகைகளின் மீது 12% ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விகிதத்தை பரிந்துரைக்கவும் கவுன்சில் பரிந்துரைத்தது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
#WATCH | On the 53rd GST Council Meeting, Union Finance Minister Nirmala Sitharaman says "Council recommended to prescribe 12% GST on all solar cookers whether it has single or dual energy source. Services provided by Indian Railways to the common man, sale of platform tickets,… pic.twitter.com/pJGBydgVz5
— ANI (@ANI) June 22, 2024
இந்திய ரயில்வே வழங்கும் சேவைகள், நடைமேடை டிக்கெட் விற்பனை, ஓய்வு அறைகள், காத்திருப்பு அறைகள், ஆடை அறை சேவைகள் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.