மேலும் அறிய

Condoms CWG Delhi : கழிவு வடிகால்களில் 4000-க்கும் அதிகமான ஆணுறைகள்.. காமன்வெல்த் கிராமத்தில் நடந்தது என்ன?

விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற விளையாட்டு கிராமத்தின் வடிகாலில் சுமார் நான்காயிரம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய விளையாட்டு நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இப்போது, ​​உலகம் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி சீராக முன்னேறி வரும் நிலையில், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி மூன்று நாள்களான நிலையில், 10 ஆண்டுகளுக்கு சற்று பின்னோக்கிச் சென்று, இந்தியாவில் நடைபெற்ற 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்வது சுவாரஸ்யமானதாக இருக்கும். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வு முடிந்து, நீண்ட நாள்களான பிறகும் இது பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தன.

71 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், நிதி முறைகேடு முதல் அலுவலர்களின் ஊழல் வரை பல தவறான காரணங்களுக்காக இது செய்திகளில் இடம்பிடித்தன. 

இருப்பினும், ஒரே நேரத்தில் குழப்பமாகவும் வேடிக்கையாகவும் இருந்ததற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இதில், விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற விளையாட்டு கிராமத்தின் வடிகாலில் சுமார் நான்காயிரம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளால் வடிகால் அடைக்கப்பட்டபோது இது தெரியவந்தது.

2010 ஆம் ஆண்டு, அக்ஷர்தாம் விளையாட்டு கிராமத்தில், கிட்டத்தட்ட 7,000 போட்டியாளர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் சிறந்த உடல் நிலையில் இருந்தனர். இவர்கள், அந்தந்த போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் தங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட விளையாட்டு வீரர்களுக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கலாம். 

பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தவும் அவர்கள் தங்கியிருந்த கிராமத்தில் அவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி இருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

தேசிய ஊடகங்களில், வடிகாலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியானது. இதுகுறித்து காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் மைக்கேல் ஃபென்னல், விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பான பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பது பாசிட்டிவான ஒன்றே என தெரிவித்திருந்தார்.

பல விளையாட்டு வீரர்கள், இம்மாதிரியான விளையாட்டு நிகழ்வுகளுக்கு தங்களைத் தாங்களே தயார் செய்யும் போது, அதிக பாலியல் உணர்வு ஏற்படும் என ஒப்புக்கொண்டுள்ளனர். 

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, 1992 ஆம் ஆண்டு பார்சிலோனா போட்டிகளிலிருந்து ஒவ்வொரு விளையாட்டு கிராமத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பெய்ஜிங்கில் 2008 இல் அதிகபட்சமாக 1,00,000 ஆணுறைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget