மேலும் அறிய

Crime : அதிர்ச்சி...குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்ட நான்கு பெண்கள் மரணம்...நடந்தது என்ன?

ஐந்து நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கருத்தடை முகாமில் கலந்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.

ஐந்து நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கருத்தடை முகாமில் கலந்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்தனர். இதை அலுவலர்கள் செவ்வாய் அன்று உறுதி செய்துள்ளனர். அந்த முகாமில் டபுள் பஞ்சர் லேப்ராஸ்கோபி (DPL) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக பெண்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து பொது சுகாதாரத்துறை மாநில இயக்குநர் ஜி சீனிவாச ராவ் தலைமையில் விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார்.

நீதிக் கோரி திங்கள்கிழமை மாலை போராட்டம் நடத்தப்பட்டதாக இப்ராகிம்பட்டினம் போலீஸார் தெரிவித்தனர். DPL என்பது ஒரு பெண் கருத்தடை திட்டம் ஆகும். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25-ம் தேதி 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முன்னதாக, கருத்தடை அறுவை சிகிச்சை செய்த கொண்ட இருவர் உயிரிழந்த நிகழ்ந்த நிலையில், மற்ற இருவரும் திங்கள்கிழமை மாலை இறந்தனர். மாநில அரசின் இரண்டு படுக்கையறை வீடு திட்டத்தின் கீழ், பெண்களின் உறவினர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மற்றும் வீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி (GE) உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த சீனிவாச ராவ், பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றார். நான்கு இறப்புகளை அடுத்து, 30 பெண்களின் உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகரத்தில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் ஏழு பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் இங்குள்ள அரசு நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் (நிம்ஸ்) சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 பெண்களில் எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை அரசு ஏற்று கொண்டுள்ளது. சிகிச்சை நடந்த மருத்துவமனையின் சூப்பிரண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் உரிமம் தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget