Mark Sheet Viral : ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36: பாஸ்மார்க் வாங்கிய மாணவர் ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய கதை
குஜராத் பருச் மாவட்ட ஆட்சியராக உள்ள துஷார் டி. சுமேரா, பத்தாம் வகுப்பில் பாஸ் மார்க் மட்டுமே வாங்கியுள்ளார்.
பத்தாம் வகுப்பு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஐஏஎஸ் அலுவலர் ஒருவர், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
भरूच के कलेक्टर तुषार सुमेरा ने अपनी दसवीं की मार्कशीट शेयर करते हुए लिखा है कि उन्हें दसवीं में सिर्फ पासिंग मार्क्स आए थे.
— Awanish Sharan (@AwanishSharan) June 11, 2022
उनके 100 में अंग्रेजी में 35, गणित में 36 और विज्ञान में 38 नंबर आए थे. ना सिर्फ पूरे गांव में बल्कि उस स्कूल में यह कहा गया कि यह कुछ नहीं कर सकते. pic.twitter.com/uzjKtcU02I
குஜராத் பருச் மாவட்ட ஆட்சியராக உள்ள துஷார் டி. சுமேராவால் பத்தாம் வகுப்பில் பாஸ் மார்க் மட்டுமே வாங்கு முடிந்தது. ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களும் கணிதத்தில் 36 மதிப்பெண்களும் வாங்கியுள்ளார்.
சுமேராவின் புகைப்படம் கொண்ட தெளிவற்ற மதிப்பெண் சான்றிதழை சத்தீஸ்கர் கேடரின் 2009 பேட்ச் ஐஏஎஸ் அலுவலர் அவனிஷ் சரண் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Thank You Sir https://t.co/MFnZ7vSICz
— Tushar D. Sumera,IAS (@TusharSumeraIAS) June 11, 2022
இதுகுறித்து அவர் ட்விட்டரில், "தனது மதிப்பெண் பட்டியலைப் பகிர்ந்து கொண்ட பருச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேரா, 10ம் வகுப்பு தேர்வுகளில் பாஸ் மார்க் மட்டுமே வாங்கியதாக கூறியுள்ளார். 100க்கு ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.
ஊர் மக்கள் மட்டுமின்றி அவருடைய பள்ளிக்கூடத்திலும் அவரால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்" என பதிவிட்டுள்ளார்.
தனது மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்த அவனிஷூக்கு சுமேரா நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2012 ஆண்டு, சுஷார் சுமேரா ஐஏஎஎஸ் அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். கலைப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த அவர், குடிமை பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்