ஆடு.. உடும்பு.. தற்போது மாடு.. வன்கொடுமைக்கு ஆளாகும் மிருகங்கள்! தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்!
இந்தியாவில் உயிரினங்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது
புனேவில் பசுவை பாலியல் வன்கொடுமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சட்டங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இது ஒருபுறமிருக்க உயிரினங்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இயற்கைக்கு மாறாக உயிரினங்களை வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் 4 மாத சினையாக இருந்த ஆட்டை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதேபோல் மகாராஷ்ட்ராவில் உள்ள ஷாய்தரி வனப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 3 நபர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து செல்போன்களை சோதனையிட்டதில் பெரிய பல்லி வகை இனமான உடும்பை பிடித்து பாலியல் வன்புணர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு கொடூரமாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பசுவுடன் இயற்கைக்கு மாறாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உறவு கொண்டுள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாக சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இப்படி உயிரினங்களையும் விட்டு வைக்காமல் பாலியல் வன்கொடுமை நடக்கும் சம்பவங்கள் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் அதிகளவில் நடந்து வரும் நிலையில் புனேவில் பசு ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள லோனாவாலா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சதீஷ் தக்டு கோகரே என்பவர் கடந்த மே 31 ஆம் தேதி திடீரென தனது பசுவின் அலறல் சத்தம் கேட்டு மாட்டுத் தொழுவத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம நபர் ஒருவர் ஆடையின்றி மாட்டுடன் பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக சத்தம் போடவே சதீஷின் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சியின் உதவியுடன் அந்த நபர் குஸ்கானில் வசிக்கும் 22 வயதான தீபக் ராஜ்வாடே என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையில் சதீஷ் தக்டு கோகரே புகாரளித்தார். இதனடிப்படையில் போலீசார் தீபக்கை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்