மேலும் அறிய
12 PM Headlines: நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை நடந்தது இதுதான்..!
12 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் செல்வ விநாயகம் மத்திய அரசுக்கு கடிதம்.
- கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்
- இயேசு கிருஸ்து ஒரு மதத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே உரித்தானவர் என ஆளுநர் ரவி பேச்சு.
- மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம், மொழி அழிந்தால் இனமும் அழிந்து போகும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
- அதிமுக முன்னாள் எம்.பி மஸ்தான் தஸ்தகீர் காலமானார்.
- திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு அரசியல் புரட்சியை செய்யவுள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
- யாத்திரைக்கு அனுமதி கோரிய வி.ஹெச்.பியின் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி நீதிபதி சாமிநாதன் உத்தரவு.
- வரும் 25ஆம் தேதி தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- "ஓபிஎஸ் தலைமையிலான கூட்டத்தை கட்சி கூட்டமாக பார்க்க முடியாது" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் லாபகரமாக இயங்கி வருவதாக, அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- வங்கக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியா:
- நாடு முழுவதும் வரும் 2023 மே மாதத்தில் 21 முதல் 31 தேதிகளுக்கு இடையில் இளங்கலை நுழைவுத்தேர்வான ’க்யூட்’ நடைபெறும் என யு.ஜி.சி தெரிவித்துள்ளது.
- சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, கன்னியாகுமரி, மதுரை ரயில் நிலையங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல்.
- இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா விதிமுறைகளை பயன்படுத்த மத்திய சுகாதாரதுறை அமைச்சர் காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், பிரதமர் மோடி குஜராத் தேர்தலில் விதிமுறைகளை பின்பற்றினாரா என பதில் கேள்வி.
- சீனாவை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் BF.7 பாதிப்பு இந்தியாவில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. விமானநிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை தொடக்கம்.
- பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
- 2018 முதல் 2021-ம் ஆண்டு வரை 4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் 42% சதவீத கடல் அரிப்புக்குள்ளாகி நீர்மட்டம் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல்.
- நாட்டில் 60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ சட்டவிரோத போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
- படுக்கை வசதியுடன் கூடிய 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம்:
- ரஷ்யாவிடம் ஒரு போதும் சரணடைய மாட்டோம் என உக்ரேன் அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
- ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனித்து விடப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.
- ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
- ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- முட்டாள்தனமான நபர்கள் கிடைத்தால் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.22 கோடியாக உயர்வு
- ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்து வரும் வங்க தேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.
- வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து நவ்தீப் சைனி விலகல்.
- ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது அழுத்ததை உணர்ந்தால், நீங்கள் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று கபில்தேவ் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்ட பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3வது இடத்தில் உள்ளார்.
- ரிக்கி பாண்டிங்கை விட தோனியே மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion