மேலும் அறிய
Advertisement
ஆப்கன் போர் முதல் மோடி- போப் சந்திப்பு வரை - கிறிஸ்துமஸ் குடிலில் நாட்டு நடப்பை காட்சிபடுத்திய ஓவிய ஆசிரியர்
ஆப்கன் போர், கொரோனா, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், விவசாயிகள் போராட்டம் ஆகிய நிகழ்வுகள் குடிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெறைரா தெருவைச் சேர்ந்தவர் இசிதோர் பர்ணாண்டோ (58). தனியார் பள்ளி ஓவிய ஆசிரியரான இவர். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அவருடைய வீட்டில், உலகம் முழுவதும் ஆண்டு தொடக்கத்தி இருந்து முடிவு வரை நடந்த முக்கிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கருத்துருக்களை விளக்கும் வகையில் வித்தியாசமான முறையில் கிறிஸ்து பிறப்பு குடில் அமைப்பது வழக்கம்.
கடந்த ஆண்டுகளில் தீவிரவாதம் ஒழிப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்தல், சகிப்புத்தன்மை, விவசாயிகளின் போராட்டம் ஆகிய கருத்துக்களை விளக்கும் வகையில் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து இருந்தார்.
தொடர்ந்து இந்தாண்டு உலக அளவில் பரவலாக கவனம் பெற்ற ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், விமானத்தில் இருந்து கீழி விழுந்து உயிரிழந்த அப்பாவிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், பிரதமர் நரேந்திரமோடி போப்பாண்டவரை சந்தித்தது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொரோனா மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் படங்களையும் பொம்மைகளையும் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று காலங்களிலும், கடுமையான மழை வெள்ளத்தில் மக்கள் போராடிக் கொண்டிருந்த சமயங்களிலும் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனைகளிலும் வெள்ளம் பாதித்த இடங்களிலும் தாம் களமிறங்கி குறிப்பறிந்து தேவையான உதவிகளையும் ஏற்பாடுகளையும் திருத்தங்களையும் செம்மையாக செய்து தமிழக மக்களின் ஊழியனாக தமிழக மக்களுக்கு சேவை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டும் விதமாக குடில் அமைத்துள்ளார்.
குழந்தை திருமணம் பாலியல் வன்முறை இவற்றையெல்லாம் தாண்டி பிரபஞ்ச அழகியாக இந்தியப் பெண் ஒருவர் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகவும் குறிபிட்டு இந்த நிகழ்வு தான் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் ஊட்டுவதாக அமைந்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion