Rich Person List: உலக பணக்காரர்கள் பட்டியல்; பெண்களில் யார் முதலிடம்; அம்பானி எந்த இடம்?
Forbes world's billionaires list: உலகின் பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் தனது வருடாந்திர உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டது, இது கடந்த ஆண்டை விட பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணக்காரர்கள் பட்டியல்:
உலகின் பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது,
உலகில் 141 பில்லியனர்கள் அதிகமாக உள்ளதாகவும், மொத்தம் 2,781 பில்லியனர்கள் உள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைத்து பில்லியனர்களின் மொத்த மதிப்பு 14.2 டிரில்லியன் டாலராக உள்ளது. என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பண மதிப்பானது, கடந்த 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 813 பில்லியனர்கள் உள்ளனர். சீனாவில் 473 பில்லியனர்கள் மற்றும் இந்தியாவில் 200 பேர் உள்ளனர்.
- எல்விஎம்ஹெச்சின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் 233 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளனர்.
- டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் 195 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
- 3வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 195 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார்.
- அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 177 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்
இதையடுத்து பெண்களின் பணக்காரர்கள் யார் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.
- L'Oreal நிறுவனத்தின் நிறுவனர் பேத்தியான Francoise Bettencourt Meyers, உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண் மற்றும் 99.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இவரைத் தொடர்ந்து வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் மகள் ஆலிஸ் வால்டனின் மதிப்பு 72.3 பில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜூலியா கோச் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் 64.3 பில்லியன் டாலர் மதிப்புடையவர்கள் என்றும்
- 38.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜாக்குலின் மார்ஸ்
- 35.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட் ஆகியோர் முன்னிலை பட்டியலில் உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். மேலும் ஆசிய அளவில் முதல் இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் கவுதம் அதானி உலக அளவில் 17வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: Latest Gold Silver Rate: ரூ. 52 ஆயிரத்தை தொட்டு அதிர்ச்சி.. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை..!