மேலும் அறிய

எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்

தருமபுரி அருகே பணி இடமாற்றம் பெற்று சென்ற தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி, பள்ளிக்கு செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியை, 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 17 மாணவர்களும், 18 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தமிழ்மணி பொறுப்பேற்றார். அவர் வந்தபோது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக இருந்த நிலையில், தலைமையாசிரியர் தமிழ்மணி வீடு வீடாக சென்று மாணவர்களின் பெற்றவர்களிடம் பேசி மாணவர்களை, இதே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து தலைமையாசிரியர் தமிழ்மணி மீது நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள் அரசு தொடக்கப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். 

எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
இந்த நிலையில் ஆசிரியர் தனது தனிப்பட்ட ஆர்வத்தால் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, அதிக கவனம் செலுத்தி படிக்க வைப்பது, மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை, விளையாட்டு என பல்வேறு இடங்களுக்கு அழைத்து போட்டிகளில் கலந்து கொள்ள வைத்துள்ளார். இதனால் மாவட்ட அளவில் மாணவர்கள் முதலிடமும் பிடித்துள்ளனர். அதேபோல் படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்தி, ஆங்கிலம் நன்றாக படித்து வந்துள்ளார். தமிழ்மணி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளியின் தரம் அதிகரித்து, மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பொது பணி மாறுதல் கலந்தாய்வில், தமிழ்மணி ஆசிரியர், செங்குட்டை அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றுள்ளார்.

 இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்றுள்ளதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது தலைமை ஆசிரியரை பிரிய மனம் இல்லாத மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதனை கண்ட தலைமை ஆசிரியரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 
இந்நிலையில் இன்று காலை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி பள்ளிக்கு பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி, மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும், மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பாமல், பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர், காவல் துறையினர்  உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களுக்கு தமிழ்மணி ஆசிரியரை மீண்டும் பணியை அமர்த்த வேண்டும், அவர் வந்த பிறகுதான் இந்த பள்ளி நன்கு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அவரை நம்பியே மெட்ரிகுலேஷன் படித்த பிள்ளைகளை கூட அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம். அவரைப் போல் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே அவரை மீண்டும் இங்கு பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார். ஆனால் பணி மாறுதலில் அவர் பெற்றுள்ளதால் இப்போதைக்கு செய்ய முடியாது ஆனால் அவரை பணி மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர்கள், ஆசிரியரை திரும்பவும் பணியமர்த்தும் வரை, நாங்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் தமிழ்மணி ஆசிரியரே தங்கள் பள்ளிக்கு மீண்டும் வேண்டுமென மாணவ, மாணவிகளும் கண்ணீர் விட்டு அழுதனர். 

இதனை அறிந்த தலைமையாசிரியர் தமிழ்மணி நேரில் வந்து மாணவ,  மாணவிகளை சமரசம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுததால், மாணவர்களை கண்டு தலைமையாசிரியரும் கண் கலங்கினார்.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் இருவரிடமும் கடிதம் பெற்று, இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மீண்டும் தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வரவில்லை என்றால், பிள்ளைகளை வேறுபள்ளிக்கு சேர்த்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் தலைமை ஆசிரியர் பணி மாறுதலில் சென்றதால், பிரிய மனம் இல்லாமல் பெற்றோர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கண் கலங்கி அழுததும், தன் மீது அளப்பரிய அன்பு வைத்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அன்பை நினைத்து தலைமையாசிரியர் அழுததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Embed widget