மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்

கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லத்தினை சேர்க்க, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லம் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் வெள்ளம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெல்லத்தை தொகுப்பில் சேர்த்து வழங்க, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உருண்டை வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, பொங்கல் பண்டிக்கை காலங்களில் உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்து விற்பனையாகும்.

பொங்கல் தொகுப்பில்  இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்
 
தற்போது பண்டிகைக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால் வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. தற்போது உருண்டை வெல்லம் கிலோ ரூபாய் 45 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிற்பம் ரூபாய் 1350-க்கு விற்கப்படுகிறது.
 
பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டை விட முன் பதிவு குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெல்லம் விலை கிலோ 50 வரை விற்பனையானால், மட்டுமே வருவாய் கிடைக்கும். பொங்கல் தொகுப்பிற்காக உருண்டை வெல்லம் கொள்முதல் செய்தால், தங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லம் சேர்த்து வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உருண்டை வெல்லத்தை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. இதனால் தரம் இல்லாத வெல்லம் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் பெரும் புகார் எழுந்தது. அதேபோல் அரசுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் பொழுது, விலை அதிகம் மற்றும் போக்குவரத்து கட்டணம் என விலை அதிகமாக இருந்து வந்தது. 

பொங்கல் தொகுப்பில்  இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்
 
தற்பொழுது உருண்டை வெல்ல உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகிற நிலையில், இந்தாண்டு உருண்டை வெல்ல உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் உருண்டை வெல்லத்தை, அந்த மாவட்டங்களிலே கொள்முதல் செய்ய வார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் பொங்கல் தொகுப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு மட்டுமே அறிவித்தது. இதில் உருண்டை வெல்லம் இடம்பெறவில்லை. இதனால் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பொங்கல் தொகுப்பிலே உருண்டை வெல்லம் இடம்பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லத்தினை சேர்க்க, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் வெல்லத்தினை வழங்கவும், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget