'அடிக்கடி ஆண்ட்ராய்டு போனை பாத்துக்கிட்டே இருந்தீங்கன்னா இந்த நோய் வருமாம்’ - ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்
ஆண்ட்ராய்டு போன்கள் இப்போது மனித குலத்தின் ஆறாம் விரலாக மாறிவிட்டது. ஸ்மார்ட் ஃபோன்களின் அதிகப்படியான பயன்பாடு போதைப்பொருள் போன்று நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது.
அலாரமாக, ரேடியோவாக, டிவி யாக, கணினியாக, விளையாட்டுக்களமாக பல்வேறு நிலைகளில் இதன் பயன்பாடுகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம் என்று சொல்லப்படும்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மனித திறன் ஸ்மார்ட் போனின் வருகையால் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க கல்லூரி மாணவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 10 மணி நேரம் ஸ்மார்ட் போனை உபயோகிக்கின்றனர்.
நண்பர்களுடன் செலவழிக்கும் நேரத்தை விட இந்த நேரம் அதிகம் ஐந்தில் மூன்று பேர் தங்களின் ஸ்மார்ட் போன் இல்லாமல் வெளியில் 60 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை. ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு பிறகு முதுகு வலி போன்ற பிரச்சனைகள் எதிர்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட் ஃபோனை தெரிந்து உபயோகிப்பதால் குறுகிய கால பாதிப்புகளை தாண்டி நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது சமீப காலத்திய ஆய்வுகள் தொடர்ந்து தெரிவிக்கும் தகவல்.
இந்நிலையில் உளவியல் ரீதியாக செல்போன் சார்ந்த பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து உலகில் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: நம்மில் 90% மக்கள் ஆண்ட்ராய்டு போன்களுக்கு அடிமையாகி ஆண்டுகள் கடந்து விட்டது. உறவுகளைப் பிரிந்து இருக்க முடியாத காலம் போய்விட்டது.
ஆனால் ஃபோன்களை பிரிந்து இருக்க முடியாத என்ற நிலை இப்போது இருக்கிறோம். இதனால் போன் சார்ந்த நோபோபீ பியா என்னும் பாதிப்புகள் பெரும்பாலானருக்கு இருக்கும் என்பதே உண்மை. அடிக்கடி போனை செக் செய்வது, காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் போனை பார்ப்பது, சாப்பிடும் போது பிறரிடம் பேசும் போதும் போனை உபயோகிப்பது, சுற்றம் பார்க்காமல் எங்கும் போனை வைத்து டைம் பாஸ் செய்வது, கண்ணில் உறக்கம் தோன்றும் வரை போனை பிரியாமல் இருப்பது போன்றவை இதற்கான அறிகுறிகள். பேட்டரி டவுன் ஆனதும் உயிரே போனது போல் உணர்வது இதற்கெல்லாம் உச்சம். இதுபோல் ரெஸ்ட் ரூமில் கூட போனை உபயோகிப்பது நெட்வொர்க் இல்லாதபோது பெரும் பதற்றத்தில் ஆள்வது போன்றவை நோபோபீ பியா பாதிப்புகளால் ஏற்படும் நினைவுகள் தான்.
இது போன்ற தேவையற்ற பயங்களும், பதட்டங்களும் உயரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகைத்து விடும். இது மட்டுமன்றி கவனக்குறைவு செய்யும் செயல்களில் முறையின்மை போன்ற தாக்கங்களும் நம்மில் உருவாகும்.
அதிக நேரம் பயன்படுத்தும் போது போனில் வெளிச்சத்தால் கண்ணுக்கு பாதிப்பு அதிகம். கண்களை சுற்றி கருவளையம் முறையற்ற மெலடோனின் சுரப்பு, தூக்கமின்மை போன்ற பாதிப்புகளும் தொடரும் இது ஒரு கட்டத்தில் சக மனிதர்களிடமிருந்து நம்மை பிரித்து விலக செய்து விடும். எனவே ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்பாட்டுக்குரிய ஒரு கருவியாக மட்டுமே பார்க்க வேண்டும். வாழ்க்கையின் ஒரு அங்கமாக நினைத்தால் நிலைமை மிக மோசமாகிவிடும். மேலும் இதுபோன்ற பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பெரிய அளவிலான ஆலோசனைகள் எதுவும் தேவையில்லை.
தினமும் போன் உபயோகிக்கும் நேரத்தை குறைப்பது, நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவது, புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டாலே போதும் இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினார்.
சமூக இணைப்புகளை தனிமைப்படுத்துகிறது
நீண்ட நேரம் ஸ்மார்ட் திரையினை பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு வித பதட்டத்தை மனதில் ஏற்படுத்துகிறது. ஃபோனில் நண்பர்களுடன் உரையாடுகிறோம் தொடர்ந்து அவர்களின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் இந்த சூழல் உருவாகிறது. நாம் எதிர்பார்த்தபடி பதில் வரவில்லை என்றால் அழுத்தம் கூடுகிறது. மொபைல் போனில் விளையாடும் ஒவ்வொரு நேரத்திலும் நமது ஆரோக்கியம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் போன் இருந்தால் உலகம் நமது உள்ளங்கையில் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இது போன்கள் நம்மை சமூகத்துடன் இணைப்பதை காட்டிலும் தனித்துவிடும் பணியை தான் பிரதானமாக செய்கிறது.
உறவுகள், நட்புகள் என்று பலரிடமிருந்து விலகி நிற்க நேர்கிறது. வாழ்வின் உணர்வுபூர்வமான தருணங்களை கூட பலர் முழுமையாக உணராமல் செய்வதற்கு ஸ்மார்ட் போன் வழிவகிக்கிறது என்பதும் உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கும் தகவல்.