(Source: ECI/ABP News/ABP Majha)
Fast Foods: ஜங் ஃபுட் சுவை தரும்; ஆனால் ஆரோக்கியம் தராது: நிபுணர்கள் எச்சரிக்கை
நாவிற்கு ருசியூட்டி உடலுக்கு தீங்கு செய்யும் துரித உணவுகளால் அதிகரிக்கும் இருதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கை
ஜங் ஃபுட் என்னும் துரித உணவுகள் நாவிற்கு சுவை தரும் ஆனால் மனித உடலுக்கு எந்த வித ஊட்டச்சத்தையும் தராது.
இது போன்ற உணவுகளை குப்பை உணவுகள் என்று உளவியல் நிபுணர்கள் வரையறு த்துள்ளனர். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை உண்போர் ஒரு நாள் மட்டும் இதுபோன்ற உணவுகளை உண்ணலாம். இது துரித உணவுகளை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வுகள் ஆகும்.
அந்த வகையில் நடப்பாண்டு ஜூலை 21-ஆம் தேதி உலக குப்பை உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளில் குப்பை உணவுகள் என்றால் என்ன என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல உணவு என்பது சுவையில் சற்று குறைந்திருந்தாலும் அதில் ஆரோக்கிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருக்க வேண்டும்.
அதேபோல் அதிகம் கொழுப்பு மற்றும் உப்பு சர்க்கரை இல்லாமல் இருக்க வேண்டும். இந்த வகையில் தற்போது நாம் வயது வித்தியாசம் இல்லாமல் உட்கொள்ளும் நொறுக்கு தீனிகள், சாக்லேட், குளிர்பானங்கள், மதுபானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்ற தின்பண்டங்கள் என்று அனைத்துமே குப்பை உணவுகள் தான்.
மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் என்ற பெயரில் துரித உணவுகளை உட்கொள்வது வாடிக்கையாக இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாகவே இது பசியாற்றும் உணவாக உண்ணும் வழக்கம் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் தொடர்ந்து இந்த வழக்கம் பல்வேறு நோய் அபாயங்களுக்கு வித்திட்டு வருகிறது
என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இது குறித்து உணவியல் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:-
உலக அளவில் துரித உணவுகள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூழலில் ஆர்டர் கொடுத்து உண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துரித உணவுகளின் வர்த்தகம் கோடிக்கணக்கில் பெருகி உள்ளது. இதனால் சமீப ஆண்டுகளாக தரம் என்பதை விட வர்த்தகம் சார்ந்த துரித உணவுகள் அதிக அளவில் தயாராகி வருகிறது.
இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளும் மனிதர்களை தொட்டு தொடர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணமும் நீரிலீவு, புற்றுநோய், இதய நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
இதற்கு குப்பை உணவுகள் என்னும் துரித உணவுகளும் ஒரு முக்கிய காரணம் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. புரதம் வைட்டமின் கனிம சத்துக்கள் மிகக் குறைந்த அளவு இருப்பது அல்லது இல்லாமலே இருப்பது துரித உணவு.
மிகுந்த உப்பும் கொழுப்புமே இந்த உணவுகளில் பிரதானமாக உள்ளது என்று தேசிய சத்துணவுக் கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு நீரிழிவு, உயரத்த அழுத்தம், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 29 சதவீதமாக இருந்தது. இது 2000 ஆண்டு 37 சதவீதம் 2010 ஆம் ஆண்டு 53 சதவீதம் என்று உயர்ந்தது, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி 58 சதவீதமாக உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இது மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரவுகளில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளநர்.
துரித உணவுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே தொடரும் அபாயங்களை தவிர்க்க பெரும் விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியம் குறித்த பாரம்பரிய உணவுகளின் நம்மை குறித்து பொதுமக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும்.
குறிப்பாக பள்ளி குழந்தைகளிடம் இதை ஆரம்பிக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் துரித உணவுகள் விற்பது தடை செய்யப்பட வேண்டும். பிரபலங்களும் குழந்தைகளும் திசை திருப்பும் துரித உணவுகளுக்கு விளம்பர தூதுவர் ஆவதை தவிர்க்க வேண்டும். இதற்குரிய உறுதியை எடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும் இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறினர்