மேலும் அறிய
Advertisement
Dharmapuri: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழிவகுக்கும் நோக்கில் வழக்கு பதிவு - வழக்கறிஞர்கள் ஆட்சியரிடம் புகார்
வழக்கறிஞர்களை பழிவாங்குவதற்காக பொய்யான வழக்கை பதிவு செய்தும், இரண்டு தரப்பும் சமரசமாக இருக்கும் நிலையில், காவல் துறை வேண்டுமென்றே செய்து வருகிறது.
தருமபுரி அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழிவகுக்கும் நோக்கில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததாக வழக்கறிஞர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், தனக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டு, பாலக்கோடு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் தனக்கு சாதகமாக வழக்கை நடத்தி கொடுக்கும்படி, வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நிலப்பிரச்சனை ஏற்பட்டிருந்த ராஜா மற்றும் ராமகிருஷ்ணன் இருதரப்பும் பேசி, சமரசம் செய்து கொண்டுள்ளனர்.
அப்பொழுது இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்லும் பொழுது வழக்கறிஞர் சரவணகுமார், நண்பரான சத்தியமூர்த்தி என்பவரை உடன் அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்து கொண்ட ராமகிருஷ்ணனும், ராஜாவும் இடையே சொத்துக்கு உண்டான பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். இதனை தெரிந்து கொண்ட சத்தியமூர்த்தி, இந்த நிலப்பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டது, நான் வந்ததால் தான், எனவே தனக்கு ரூ.5 லட்சம் பணத்தை இரு தரப்பிடம் இருந்து வாங்கி தர வேண்டுமென வழக்கறிஞர் சரவணகுமார் இடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை எடுத்து வழக்கறிஞர் சரவணகுமார், சத்தியமூர்த்திக்கு 22,000 பணத்தை, இணைய வழியில் தனது கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.
மேலும் மீதி பணம் தர வேண்டும் என சத்தியமூர்த்தி வழக்கறிஞரை வலியுறுத்தி வந்துள்ளார். அவ்வாறு பணத்தை கொடுக்கவில்லை என்றால், தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்து, உங்களை உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர் சரவணகுமார் நிலம் பிரச்சனையுள்ள ராமகிருஷ்ணன் என்பவரை வரவழைத்து ரூ.1, 78,000 பணத்தை வாங்கி சத்தியமூர்த்திக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நிலம் தொடர்பான பிரச்சனை பாலக்கோடு நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் சமரசத்தில் தீர்வு பெற்று, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து, பதிவு செய்து கொள்ள, நேற்று முன்தினம் வழக்கறிஞர் சரவணகுமார் மற்றும் ராமகிருஷ்ணன், ராஜா ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமூர்த்தி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நிலத்தகராறில் இருந்த, ராமகிருஷ்ணன் என்பவரை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து சென்று, கையில் இருந்த சான்றிதழை பிடிங்கியும், தனக்கு மீதமுள்ள தொகையை கொடுக்காமல் சான்றிதழை பதிவு பண்ண கூடாது என அந்த சான்றிதழை கிழித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரில் காரிமங்கலம் காவல் துறையினர், வழக்கறிஞர்கள் சரவணன் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் வழக்கறிஞர்களை பழிவாங்கும் நோக்கில், காரிமங்கலம் காவல் துறையினர் சத்தியமூர்த்தியிடம் புகாரினை பெற்று, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக, வழக்கறிஞர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர். மேலும் வழக்கறிஞர்களை பழிவாங்குவதற்காக பொய்யான வழக்கை பதிவு செய்தும், இரண்டு தரப்பும் சமரசமாக இருக்கும் நிலையில், காவல் துறை வேண்டுமென்றே செய்து வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion