மேலும் அறிய
Advertisement
ரூ.99 கொடுத்த பலரின் உதவியால் மேகாலயாவில் இருந்து சொந்த ஊர் வந்தடைந்த லாரி டிரைவர் உடல்; நிர்கதியாய் நிற்கும் மனைவி
4 வயது பெண் குழந்தையும் பிறந்து ஒரு மாதமே ஆன கை குழந்தையும் ஆக குழந்தைகளுடன் ஆதரவின்றி தவிக்கும் பெண். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய கோரிக்கை.
மேகாலயாவில் ஏற்பட்ட லாரி விபத்தில் உயிரிழந்த தருமபுரியை சார்ந்த லாரி ஓட்டுநரின் உடல், ரூ.99 கொடுத்த பலரின் உதவியால், விமானம் மூலம் சொந்த ஊர் வந்தடைந்தது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தாமரை கோழியம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஜெய் ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் லாரி ஓட்டுனரான மணிகண்டன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவருடைய லாரியில் கண்ணாடி பாரம் ஏற்றிக் கொண்டு மேகலாயாவில் உள்ள சில்லாங் பகுதிக்கு சென்றுள்ளார். இதில் மணிகண்டன் ஓட்டுனராகவும், அவரது உறவினர் பெருமாள் என்பவர் உதவியாளராகவும் சென்றுள்ளனர். கடந்த 24.01.24 புதன்கிழமை காலை சில்லாங் அருகே சென்றபோது தாழ்வான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் இறங்கி, அருகில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்துள்ளது. இதில் லாரி முற்றிலுமாக நொறுங்கியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உதவியாளராக இருந்த பெருமாள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிர் தப்பிய பெருமாள் மணிகண்டனின் வீட்டிற்கு விபத்தில் மணிகண்டன் தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலை இதனால் பிறந்த ஒரு மாதமே ஆனா கை குழந்தையை வைத்துள்ள மணிகண்டனின் மனைவி பிரியதர்ஷினிக்கு செய்வதறியாது தவித்துள்ளார். மேலும் மேகாலயாவிலிருந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு பணம் செலவாகும் என்பதால், உதவி கேட்டு வீடியோ பதிவிட்டுள்ளார். மேலும் லாரி உரிமையாளரும் தான் லாரியை இழந்து கடன் சுமையில் இருப்பதால் தன்னால் ஓட்டுநர் மணிகண்டனின் உடலை கொண்டு வருவதற்கான வசதி இல்லை என் தனக்கு லாரி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் மணிகண்டனின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு மாக வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ லாரி உரிமையாளர்கள் வாட்ஸ் அப் குழுவில் பரப்பப்பட்டுள்ளது. இதனை அறிந்த கோவில்பட்டியில் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கணேசன் என்பவர், ஒரு நபர் 99 ரூபாய் கொடுத்தால் மணிகண்டனின் உடலை சொந்த ஊர் கொண்டுவர முடியும் என வீடியோவை பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அனைவரும் 99 ரூபாய் கியூ ஆர் கோட் மூலமாக செலுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து மணிகண்டனின் உடலை மேகாலயாவிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக சுமார் 2 லட்சத்திற்கு மேல் செலவு செய்து, விமானம் மூலமாக கொல்கத்தா, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு கொண்டு வந்து, நேற்று மாலை மணிகண்டனின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரியதர்ஷினி 4 வயது பெண் குழந்தை மற்றும் ஒரு மாதமான பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு எந்த ஒரு ஆதரவுமின்றி நிர்கதிதியாய் தவித்து வருகிறார். மேலும் லாரியின் உரிமையாளர் சாதாரணமான ஓட்டுநராக இருந்தவர் என்பதால், லாரியும் முற்றிலுமாக உறுக்குழைதுள்ளதால், லாரி உரிமையாளரும் மணிகண்டன் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியாது நிலையில் இருந்து வருகிறார். எனவே பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள மணிகண்டனின் மனைவி பிரியதர்ஷினி, இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசு ஏதேனும் நிதி உதவி வழங்க வேண்டும். அரசு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion