தென்பெண்ணை ஆற்றில் நீர் இல்லை; தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்திய பக்தர்கள்
டி.அம்மாபேட்டையில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாட குவிந்த பக்தர்கள்-தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரில்லாததால், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்திய பக்தர்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தா.அம்மாப்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் பிரசித்தி பெற்ற சென்னியம்மன் என்கிற சென்னம்மாள் திருக்கோயில் உள்ளது. அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திற்கு உட்பட்ட நீப்பத்துறையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் வெங்கட்ராமன் திருக்கோயில் உள்ளது.
இந்த இரு திருத்தலங்களும் தமிழக அளவில் பிரபலமானது. ஆடி மாதம் முதல் ஆவணி வரை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஐம்பதாயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் குடும்பம் குடும்பமாக வந்து, தாங்கள் கொண்டு வரும் ஆடு,கோழிகளை பலியிட்டு வழிபட்டு மகிழ்ச்சியுடன் நீராடி சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம்.
ஆடிப்பெருக்கு விழா என்பதால் டி.அம்மாபேட்டையில் தெண்பெண்ணை ஆற்றில் உள்ள சென்னியம்மன் கோயில், வெங்கட்ரமண சாமி வழிபாடு செய்ய ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
அவரது சாமிகளை தரிசனம் செய்துவிட்டு தென்பெண்ணை ஆற்றில் ஆடு, கோழிகளை பலியிட்டு குடும்பமாக சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.
ஆனால் மக்கள் புனித நீராடுவதற்கு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடைக்கிறது. வருடந்தோறும் எப்பொழுதும் ஆடி மாதம் பிறந்ததும், மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுது தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரில் பக்கதர்கள் குளிப்பர்.
ஆனால் இந்த ஆண்டு மழையில்லாமல் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வராமல் வறண்டு காணப்படுகிறது. ஆனால் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடி பெருக்கு விழாவை கொண்டாட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து கூடுதலாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.
ஆனால் இந்தாண்டு கர்நாடக பகுதியில் மழை அதிகாமக பெய்து, கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஆனால் தென்பெண்ணை ஆறறில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் தென்பெண்ணை ஆறு முழுவதும் நீரின்றி வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது.
ஆடி பெருக்குக்கு விழா கொண்டாட டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றில் உள்ள சென்னியம்மன் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் புனித நீராட தண்ணீரில்லாமல், குடிப்பதற்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினர்.
மேலும் ஆற்றில் தண்ணீர் வராததால், பொதுமக்கள் நீராட முடியாமல், மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட கடந்த, இந்த ஆண்டு மக்கள் வருகை குறைவாகவே இருந்தது.
புனித நீர் ஆடுவதற்காக வந்த மக்கள் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் அம்மனை தரிசித்து விட்டு சமைத்து சாப்பிடுவதற்காக டிராக்டர் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி சமைத்து மட்டும் சாப்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.