மேலும் அறிய
Advertisement
தருமபுரி அருகே இடிந்து விழும் நிலையில் நீர் தொட்டி; பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து கிடக்கும் கிணறு - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை?
தருமபுரி அருகே இடிந்து விழும் நிலையில் மேல் நிலை தண்ணீர் தொட்டி-பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து கிடக்கும் கிணற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.
தருமபுரி அடுத்த மாதமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் வெங்கடம்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்பகுதியில் வெங்கடம்பட்டி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்பொழுது இதனுடைய தூண்கள் மற்றும் மேற்புற தளம் ஆங்காங்கே கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து விழுந்தும், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்தேக்க தொட்டியின் அனைத்து பகுதிகளும் எந்த நேரத்திலும் உடைந்து விழும் தருவாயில் உள்ளது. இதனால் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கும் பணியாளர்களும் செல்வதில்லை. தொடர்ந்து இதே தொட்டி மூலம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டியிலிருந்து கசிந்து விழும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
அதேபோல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலேயே உள்ள சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊர் பொது குடிநீர் கிணறும் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வெங்கடம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் தொட்டி கட்டுவதற்கு முன்பு இந்த கிணற்றிலிருந்து ஒட்டுமொத்த கிராமத்திற்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கிணற்றில் தண்ணீர் இருப்பு உள்ளது. இருப்பினும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மெத்தன போக்கள் இவை பயன்பாட்டிற்கு இல்லாம் போயிவிட்டது. இதனால் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இந்த கிணற்றில் கொட்டப்பட்டு, சுகாதார சீர்கேடு அடைந்து கிணறு மாசுபட்டுள்ளது. அப்பகுதி வளாகம் அருகிலேயே உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அப்பதியில் உள்ள கிணறு பகுதியை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் இடியும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி புதிய தொட்டி கட்ட தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ”பழுதான மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்தி, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பழைய கிணற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து, கிணற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion