மேலும் அறிய

தருமபுரி: செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையத்தில் வழங்க 26 ஊராட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையத்தில் வழங்க 26 ஊராட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தர்மபுரி நகராட்சியை ஒட்டியுள்ள 26 ஊராட்சிகளில் செப்டிக் டேங்க் திரவ கழிவுகளை சேகரித்து நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஒருங்கிணைத்து 19 வார்டுகளில் முதற்கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடை திட்டக் கழிவு நீரை ஒருங்கிணைத்து மதிகொன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவு நீர் விவசாய பணிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. தற்போது நகராட்சியில் 14 வார்டுகளில் இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியுள்ளது.

நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தினசரி 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வசதி உள்ளது. ஆனால் தற்போது 38 லட்சம் லிட்டர் கழிவு நீர் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு நிரந்தர பயனளிக்கும் கழிவுநீர், சாக்கடை நீர், திறந்தவெளியில் தேக்கம் மற்றும் துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும்.

வீட்டிற்குள் அமைக்கும் செட்டிங் டேங்க் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை நோய் பரவும் சில பூச்சிகள் கிருமிகள் உற்பத்தியும் தடுத்து நோய் பரவுவதையும் தடுக்கலாம். பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லைகள் குறைவாகிறது. 

பாதாள சாக்கடை திட்டம் தர்மபுரி நகராட்சியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறதால் ஊராட்சிகளில் கழிவறை கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் திரவ கழிவுகளை கொட்ட. இட வசதி இல்லாமல் ஊராட்சிகள் திணறி வருகின்றன.

தருமபுரி: செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையத்தில் வழங்க 26 ஊராட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்நிலையில் நகராட்சியை ஒட்டி உள்ள தர்மபுரி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் நான்கு ஊராட்சிகள், காரிமங்கலம் ஒன்றியத்தில் நான்கு ஊராட்சிகள் மற்றும் பாலக்கோடு ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி என மொத்தம் 26 ஊராட்சிகள் உள்ளடக்கிய 260 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையில் தர்மபுரி நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் திரவ கழிவுகளை ஒப்படைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்கள் இத்திட்டத்தில் பயனடைய உள்ளன. இந்த நிலையில் நேற்று தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வைத்தார். கமிஷனர் புவனேஸ்வரன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.

தர்மபுரி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், அதற்கான பணிகளை ஆணை வழங்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல் கோபுரம் மின்விளக்கு அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் ,பொது கழிப்பிடம் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைத்தல் உள்ளிட்ட 28 பணிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதன்மூலம் 65 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு மேலும் தர்மபுரி நகராட்சியை ஒட்டி உள்ள 26 ஊராட்சிகளில் திரவ கழிவுகளை நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் வெளியிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget