தருமபுரியில் பொய்த்து போன பருவமழை; மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் வனத்துறை
தருமபுரியில் பருவமழை பொய்த்து போனதால் வனத்தை அடர்த்தியாக்க நடப்பட்ட 90 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் வனத்துறை
பருவமழை பொய்த்ததால் கோடைகால அனல் காற்றினால் மரச் செடிகள் வாடும் நிலையில் ஒன்பது டிராக்டர் மூலம் சுழற்சி முறையில் மாதம் ஐந்து முறை தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பில் 38 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 24% அளவுக்கு மட்டுமே வனப்பகுதியில் உள்ளது.
மரக்கன்றுகளுக்கு டிராக்டர் மூலம் நீரூற்றப்படுகிறது
இதில் பெரும் பகுதி வனப்பரப்பு தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. ஆனால் வனத்தின் அடர்த்தி குறைவாக உள்ளது கால்நடைகள் மேய்ச்சல் மட்டுமின்றி விறகு வெட்டுதல், மரம் வெட்டுதல் போன்ற வற்றால் வனப்பகுதியின் அடர்த்தி குறைந்துள்ளது. ஆனால் வனத்தின் அடர்த்தி குறைவாக உள்ளது இதனால் சீர் செய்து வனப்பகுதியை இழிவுபடுத்த தர்மபுரி மாவட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆனால் போதிய அளவு மழை பெய்யாததால் வனத்தில் உள்ள குளம் குட்டை மற்றும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன நிலத்தடி நீர்மட்டம அதல பாதாளத்திற்கு சென்றதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மரக்கன்றுகளும் வாடி வதங்கி வருகிறது. அதனை காப்பாற்றுவதற்காக வனத்துறையினர் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். தொப்பூர் காப்புக்காடு, பதிகம், நூல் அல்லி, ரெட்டியள்ளி, ஏலகிரி, பெரும்பாலை காப்புக்காடு என மொத்தம் 30 ஆயிரம் லிட்டரில் வளம் குன்றிய பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு அடர்ந்த வனப்பகுதியாக மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
தொப்பூர் வனப்பகுதி
தொப்பூர் வனப்பகுதியில் மழை பெய்யவில்லை இதனால் நட்ட மரங்களை பாதுகாக்க தர்மபுரி வனத்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த பிப்ரவரி மாதம் வெயில் கொளுத்த தொடங்கியது அதிகபட்சமாக 16.1 டிகிரி வாரண்ட்ஹீட் வெயில் பதிவானது தற்போது அனல் காற்று வீசி வருகிறது . தர்மபுரி வனச்சரகர் அருண் பிரசாத் தலைமையில் வனத்துறையினர் நட்ட மரக்கன்றுகளை பாதுகாக்க போர்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி 9 டிராக்டர் மூலம் சுழற்சி முறையில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. ஒரு டிராக்டர் தண்ணீர் 1200க்கு விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் மொத்த பரப்பின் 38% வனப்பகுதியாக உள்ளது கடந்த 1930 ஆம் ஆண்டு வரை தர்மபுரி வனப்பகுதியில் பசுமையாகவும் சூரிய கதிர்கள் உட்புக முடியாதவாறு அடர்த்தியாகவும் இருந்தது நாளடைவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் காடுகள் அளிக்கப்பட்டு அடர்த்தி குறைந்துவிட்டது. இதனால் பழையபடி அடர்ந்த மரக்கன்றுகள் கொண்ட பசுமை போர்த்திய காடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தர்மபுரி வனச்சரவை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட ஈட்டு நிலத்தோட்டம் திட்டத்தின் மூலம் தொப்பூர் காப்புக்காடு, பாளையம்புதூர் வனக்காவல் இன்று காமராஜ் நகர் பகுதி அருகில் சுமார் 12.75 ஹெக்டர் 3 ஹெக்டர் பரப்பளவில் தேக்கு , வேம்பு ,காட்டு, நெல்லி, ஜம்பு நாவல், ஈட்டி, கொட்டை நாவல், இலுப்பை, அரசு வில்வம், அத்தி, ஆள், நீர்மருது, விழா என 15 வகையான 6375 மரக்கன்றுகள் நடப்பட்டு மேலும் நபார்டு திட்டத்தின் மூலம் நூல் அல்லி, ரெட்டி அல்லி, காப்புக்காட்டில் ஆயிரம் மீட்டர் ஏலகிரி காப்பு காட்டில் 75 ஹெக்டர் பதிகம் காப்பு காட்டில் 250 பெரும்பாலை காப்பு காட்டில் 175 ஹெக்டர் தொப்பூர் காப்பு காட்டில் 100 ஹெட்டர் என மொத்தம் 700 எக்டர் புங்கன் செம்மரம் தேக்கு ஈட்டி இலுப்பை வேம்பு குடை வேல், காட்டுநல்லி, ஜம்பு நாவல் கொட்டை நாவல் வேங்கை, வாகை விழா வில்வம், நீர்மருது, புளியன், மலைவேம்பு ஆல், அரசு, அத்தி என 22 வகையான 70 ஆயிரம் மரக்கன்றுகளும் ஏலகிரி காப்பு காட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் 50க்டரில் 10 ஆயிரம் செம்மரக்கன்றுகளும் என மொத்தம் 90 ஆயிரம் மரக்கன்றுகள் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடவு செய்யப்பட்டது. ஆனால் போதிய மலை இல்லாததால் இந்த மரங்களை காப்பாற்ற மாதத்திற்கு ஐந்து முறை தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து வனப்பணியாளர்கள் மற்றும் கூலி ஆட்கள் மூலம் ஊற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.