மேலும் அறிய

அதிகாலையில் அதிர்ச்சி... கோவத்துடன் வந்த காட்டு யானைகள்... நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்

மூன்று காட்டு யானைகள் விவசாய பயிர்களை சாப்பிடாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து, ரேஷன் அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரங்கள் உள்ளன. இவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால், மூன்று மாதங்களுக்கு கோவை வனக்கோட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவ்வாறு வலசை செல்லும் நூற்றுக்கணக்கான யானைகள் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியான சிறுமுகை பகுதிக்கு வந்து பின்னர் அங்கிருந்து நீலகிரிக்கும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கும் பிரிந்து செல்வது வழக்கம்.

ஆண்டுதோறும் யானைகளின் வலசை காலம் மூன்று மாதங்கள் மட்டும் இருந்தாலும் யானைகள் வலசை சென்றாலும் குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் வனக்கோட்டத்தில் வனச்சரகத்தில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்த நிலையில் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரத்தில் உள்ள மூன்று காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய பயிர்களை சாப்பிடாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து, ரேஷன் அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதிகாலையில் அதிர்ச்சி...  கோவத்துடன் வந்த காட்டு யானைகள்... நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்

இந்நிலையில் இந்த மூன்று யானைகளும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்தது. அப்போது அங்கு கட்டிட  தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர செட்டுகளை உடைத்து மூன்று யானைகளும் அரிசியை தேடியது. இதனை தொடர்ந்து தகர செட்டுக்குள் தங்கி இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உயிர் பயத்தால் உள்ளேயே பதுங்கிக் கொண்டனர். தொடர்ந்து எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வட மாநில தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலாளி மட்டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அப்போது அவரை ஆண் யானை ஒன்று தாக்க முன்ற நிலையில் யானையிடம் இருந்து அத்தொழிலாளி தப்பித்து அருகில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உயிர் தப்பினார்.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தாய் யானையுடன் வரும் குட்டியானை மற்றும் ஆண் யானை என ஒரு குழுவாக இந்த மூன்று யானைகள் உள்ளன. இந்த மூன்று யானைகளும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை மட்டுமே குறி வைத்து அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுகிறது. எந்த வீடாக இருந்தாலும் அதனை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அரிசியை சாப்பிட்டு வருகிறது. மற்ற யானைகள் ஊருக்குள் புகுந்தால் விவசாய பயிர்களை மட்டும்  சேதப்படுத்துவதோடு நின்று விடுகிறது. ஆனால் இந்த மூன்று யானைகளும் எங்கு அரிசி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து அந்த வீட்டை மட்டும் உடைத்து உள்ளே செல்கிறது.

இதன் காரணமாக மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் வந்து இந்த யானைகளை விரட்டினாலும், இந்த யானைகள் பயப்படுவதில்லை. அதே சமயம் நீதிமன்ற உத்தரவை காட்டி பட்டாசு வெடித்து யானைகளை விரட்டவும்  வனத்துறையினர் தயங்குகின்றனர். வீடுகளை உடைக்கும் போது உள்ளே இருப்பவர்களின் மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. உடனடியாக இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி வெளியே வராத வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget