மேலும் அறிய

கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதாரர் தனபால் கைது செய்யப்பட்டது ஏன்? - அதிர்ச்சி பின்னணி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆதாரங்களை அழிக்க தனபால் மற்றும் ரமேஷ் உதவி செய்துள்ளனர். அது கூடுதல் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதாரர் தனபால் கைது செய்யப்பட்டது ஏன்? - அதிர்ச்சி பின்னணி

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து  ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதாரர் தனபால் கைது செய்யப்பட்டது ஏன்? - அதிர்ச்சி பின்னணி

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி,  சதீசன், பிஜின் குட்டி ஆகிய 6 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேரிடம் இதுவரை நடத்தப்படவில்லை. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மீண்டும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதாரர் தனபால் கைது செய்யப்பட்டது ஏன்? - அதிர்ச்சி பின்னணி

விபத்தில் உயிரிழந்த கனகராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ப்பு இருப்பதாகவும் கனகராஜ் சகோதாரர் தனபால் உள்ளிட்டோர் புகார் தெரிவித்து வந்தனர். தனபால், கனகராஜின் மனைவி, உறவினர்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கனகராஜின் சகோதாரர் தனபால் (44) மற்றும் அவரது உறவினர் ரமேஷ் (34) ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளைச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு பின்னர் முதல் முறையாக இருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதாரர் தனபால் கைது செய்யப்பட்டது ஏன்? - அதிர்ச்சி பின்னணி

இது தொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஐ. சுதாகரிடம் கேட்ட போது, “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆதாரங்களை அழிக்க தனபால் மற்றும் ரமேஷ் உதவியது தெரியவந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதாரர் தனபால் கைது செய்யப்பட்டது ஏன்? - அதிர்ச்சி பின்னணி

இந்த கைது குறித்து காவல் துறையினரிடம் விசாரித்த போது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய பங்காற்றியவர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆதாரங்களை அழிக்க தனபால் மற்றும் ரமேஷ் உதவி செய்துள்ளனர். அது கூடுதல் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகராஜ் விபத்து என்பது வேறு. அதற்கும் இந்த கைதிற்கும் தொடர்பில்லை. கோடநாடு வழக்கில் மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்

TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

Embed widget