மேலும் அறிய

‘தமிழுக்கும் தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பெருமை சேர்க்கிறார்’ - வானதி சீனிவாசன்

"தமிழகத்தின் பெருமிதமான நம் ஆதினத்து செங்கோல், இந்திய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்க இருக்கிறது. இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றாகும்."

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர், மத்திய அமைச்சர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு வரும் போதெல்லாம், தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாசாரம் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேசுவது வழக்கமானது. அதுவும் தேர்தல் நேரம் என்றால், கூடுதலாக தமிழ் பற்றி பேசுவார்கள் தமிழிலேயே சில வார்த்தைகள் பேசுவார்கள். ஆனால், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் தேர்தல் அரசியலுக்காக எதையும் சிந்திப்பவர் அல்ல. தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் ஏன் தமிழர்களே இல்லாத, தமிழர்களுக்கே தொடர்பில்லாத கூட்டங்களில் கூட, தமிழ் மொழி பற்றி தமிழ் கலாச்சாரம் பற்றியும் பெருமையாக பேசியிருக்கிறார் பேசி வருகிறார்.

திருக்குறள், சங்க இலக்கியங்கள், மகாகவி பாரதியார் பாடல்கள் என தமிழின் இலக்கியச் செழுமை, அதில் உள்ள உலகளாவிய மனிதநேய, சமத்துவ சிந்தனைகளை பல்வேறு உலக நாடுகளிலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அரங்குகளிலும் பிரதமர் மோடி பேசி வருகிறார். "உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். அது இந்தியாவின் பெருமிதம். இந்தியாவின் சொத்து. ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழியை கற்க வேண்டும். தமிழர்களிடம் உள்ள மொழிப்பற்று தமிழ் கலாசாரத்தின் மீதான விடாப்பிடியான பற்று அனைவருக்கும் இருக்க வேண்டும்" என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.  

ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பயணத்தை முடித்து கொண்டு இப்போது டெல்லி திரும்பியதும் வரவேற்பு கூட்டத்தில் பேசும்போதுகூட, பப்புவா நியூகினியா நாட்டில், 'டோக் பிசின்" மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டதை நினைவுகூர்ந்து, தமிழ் உலகின் தொன்மையான மொழி என்பதை மீண்டும் பறைசாற்றி இருக்கிறார். தமிழின் உலக தூதராக மாறி, தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் பறைசாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழுக்கு மற்றொரு மணி மகுடத்தை அளித்திருக்கிறார். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் கொண்ட, 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்திய திருநாடு, மக்களாட்சியில் உலகிற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது. மக்களாட்சியின் மகத்துவமான நமது இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை மே 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

ஜனநாயகத்தின் சின்னமான இந்திய நாடாளுமன்றத்தில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில், இந்தியா விடுதலை அடைந்தபோது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 'செங்கோல்' வைக்கப்பட உள்ளது. இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாகும். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இந்தியாவில் பாரம்பரியமாக ஆட்சி மாற்றம் நடக்கும்போது பின்பற்றப்பட்ட நடைமுறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூதறிஞர் ராஜாஜியின் ஏற்பாட்டில், திருவாவடுதுறை  ஆதீனத்திலிருந்து செங்கோல் தயாரித்து எடுத்துச் செல்லப்பட்டு, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம், தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு வழங்கப்பட்டது. அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட்டு, சுதந்திரப் பறவையாகி விட்டோம் என்பதை அறிவித்தது, தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக போற்றும் திருவாவடுதுறை ஆதீனத்துச் செங்கோல் தான். 

இப்படி நமது பாரதத்தின் பழமையான வரலாறு, கலாசாரத்தோடு தொடர்புடைய, தமிழகத்தின் பெருமிதமான நம் ஆதினத்து செங்கோல், இந்திய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்க இருக்கிறது. இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றாகும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்க முடிவு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget