மேலும் அறிய

'தி.மு.க என்றாலே லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம்’ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

இது மிகப்பெரிய அவமானம். தொடர்ச்சியாக இன்னொரு அமைச்சர் தண்டிக்கப்பட்டு உள்ளார். இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் இருந்தவர்களை நடவடிக்கை எடுத்து அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு கோவையில் உள்ள வடமாநில வியாபாரிகளிடம் இருந்து நிவாரண பொருட்களை சேகரித்து பாஜகவினர் அனுப்பினர். கோவை டவுன்ஹால் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு கோவை மாநகரில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் புடவை, போர்வை அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இங்கு இருந்து அனுப்புகின்றோம். அவர்களது வேதனையில் பங்கெடுக்க எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், பாரதிய ஜனதா கட்சி அதை முன் நின்று மக்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. வட இந்தியா வியாபாரிகள் இந்த பொருட்களை வழங்கி உள்ளனர். மேலும் 1500 கிலோ அரிசி மூட்டைகளை சேகரித்து அதனை சேகரித்து அனுப்புகிறோம்.

மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து உள்ளனர். வடக்கு கிழக்கு என பேசுகின்றவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் கஷ்டப்படும் மக்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் உதவி செய்ய காத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களது எண்ணத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரிவினை வாதமாக மக்களுடைய சிந்தனையை திசை திருப்பக் கூடாது. இன்று தி.மு.க அமைச்சர் பொன்முடி மீதான தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற போது, அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் இலக்கா இல்லாமல் செந்தில் பாலாஜி நீடிக்கப்பட்டு உள்ளார். இது மிகப்பெரிய அவமானம். தொடர்ச்சியாக இன்னொரு அமைச்சர் தண்டிக்கப்பட்டு உள்ளார். இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் இருந்தவர்களை நடவடிக்கை எடுத்து அவர்களை அனைவரும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு மாநிலத்தின் முதல்வர் நேர்மையாக ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும்.

பா.ஜ.க பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.மு.க முக்கிய தலைவர்கள் அமைச்சர்கள் நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஊழலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நீதிமன்ற தீர்ப்பு அதனை உறுதி செய்து உள்ளதாக வந்து உள்ளது. அமைச்சர் பொன்முடி வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் இந்த வழக்கை மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நீதிபதி ஒரு மாத காலத்திற்குள் ஓய்வு பெறக் கூடிய நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை முடித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பொன்முடி வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் வாழ்க்கை மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு உதவுகின்ற நீதித்துறை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்த வழக்கு சரியான முன்னுதாரணம் என தெரிவித்தார்.

தி.மு.க ஊழல், அதிகார துஷ்பிரயோகம் இன்று நேற்று அல்ல தி.மு.க பல்வேறு காலமாக செய்து வருகிறது. மத்தியில் நேர்மையான நிர்வாகம் நடந்து வருகிறது. தி.மு.க என்றாலே லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம். சென்னை எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய் கலந்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களோடு நாங்கள் இருக்கிறோம்,  வேண்டுமென்றே எண்ணெய்யை நிறுவனம் என்னை கசிய விட்டு அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுடைய பாதுகாப்பு மிக மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Embed widget