மேலும் அறிய

’குடும்பத்தில் 6 ஓட்டு; விழுந்ததோ ஒரே ஓட்டு’ – பாஜக வேட்பாளரின் பரிதாப நிலை..!

TN Local Body Election Results 2021: பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக், அக்கட்சியின் இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதேபோல பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.  திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம்,  பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இப்பதவிகளுக்கு கட்சியின் அதிகார சின்னங்கள் ஒதுக்கப்படாமல் சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி திமுக வேட்பாளர் கட்டில் சின்னத்திலும், அதிமுக வேட்பாளர் சங்கு சின்னத்திலும், பாஜக வேட்பாளர் கார் சின்னத்திலும், தேமுதிக வேட்பாளர் பெயிண்டிங் பிரஸ் சின்னத்திலும் போட்டியிட்டனர். மொத்தம் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 6 வேட்பாளர்கள் அப்பதவிக்கு போட்டியிட்டனர்.

’குடும்பத்தில் 6 ஓட்டு; விழுந்ததோ ஒரே ஓட்டு’ – பாஜக வேட்பாளரின் பரிதாப நிலை..!

குருடம்பாளையம் 9 ஆவது வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக சார்பில் போட்டியிட்ட அருள்ராஜ் முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார். 147 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்வாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக், அக்கட்சியின் இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். “கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ளனர். அவர் சார்ந்த கட்சியினர் வாக்களிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பத்தினராவது வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும். குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை. அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டது தானா? அல்லது வேறு யாரேனும் போட்டனரா?” என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது குறித்து சமூக வலைதளங்களிலும் பலர் கிண்டலாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget