மேலும் அறிய

Crime : பொள்ளாச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது ; 56 சவரன் நகைகள் பறிமுதல்

ஆறு வழக்குகளில் தொடர்புடைய 28 லட்சம் மதிப்பிலான 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரன் மீது மதுரையில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, கோட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத ஒரு நபர் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தனிப்படை காவல் துறையினர் பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தும், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் யமஹா ரே வாகனத்தில் அந்த நபர் சுற்றி திரிவதும், வீட்டில் ஆட்கள் இல்லாத பகுதிகளில் நோட்டம் விடுவதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.


Crime : பொள்ளாச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது ; 56 சவரன் நகைகள் பறிமுதல்

இதன் பேரில் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கோட்டூர் பகுதியில் குற்றவாளி சுற்றி வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் வசிக்கும் வீட்டில் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இவர் மீது மதுரை மாவட்டத்தில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் கோட்டூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதியில் வீடு புகுந்து திருடிய ஆறு வழக்குகளில் தொடர்புடைய 28 லட்சம் மதிப்பிலான 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ராமச்சந்திரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறுகையில், ”இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரன் மீது மதுரையில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது. ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபட்டதால், குடும்பத்துடன் இடம் பெயர்ந்து கோட்டூர் பகுதியில் வீடு எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் உரியவடம் ஒப்படைக்கப்படும். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களுக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget