![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் - போலீசாரிடம் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?
இளம் பெண் ஒருவர் ’பிரண்ட்ஸ் கால் மி தமன்னா’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அதில் புகைப்பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டார்.
![Crime: பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் - போலீசாரிடம் அளித்த விளக்கம் என்ன தெரியுமா? The woman who posted the videos with the strap knife has explained that she is living in a trance Crime: பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் - போலீசாரிடம் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/13/835bd62f3e95e88e822915a4b03edda11678711465139188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் வாயில் சிகரெட், கையில் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண், அவை பழைய வீடியோ எனவும், தற்போது திருந்தி கணவருடன் வாழ்வதாகவும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கால் மீ தமன்னா:
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்மையில் சத்திய பாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். மறுநாள் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்பகை காரணமாக கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் காவல் துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளம் பெண் ஒருவர் ’பிரண்ட்ஸ் கால் மி தமன்னா’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அதில் புகைப்பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டார். அதில் “எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம். ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் ரீல்ஸ் செய்திருந்தார். மேலும் இந்த பெண் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டாக்கத்தியுடன் வீடியோ:
இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் விருதுநகரை மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (25) வயது என்பது தெரியவந்தது. பின்னர் மாநகர காவல் துறையினர் வினோதினி மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் காவல் துறையினர் தேடிக் கொண்டிருந்தாலும் கணவருடன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிக்களை அவர் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஆயுதங்களுடன் தான் ரீல் செய்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோக்கள் எனவும், டிரெண்டிங்காக செய்த வீடியோக்கள் எனவும், தற்போது தான் திருந்தி தனது கனவருடன ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நான் வந்தால் மட்டுமே தனது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலரை விடுவிப்பேன் என காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனக் கூறியுள்ளார். அது பழைய வீடியோ நான் இப்போது அதுபோல எதுவும் செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)