மேலும் அறிய

Crime : கோவையில் காதலி கண்முன் காதலன் படுகொலை.. பிறந்தநாள் வாழ்த்து சொன்னபோது நடந்த கொடூரம்..

இன்று தன்யாவின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு நள்ளிரவில் வாழ்த்து கூற பிரசாந்த் தனது நண்பர்களான தரணி பிரசாத், குணசேகரன் மற்றும் அபிஷேக் ஆகிய மூவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

கோவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறச் சென்ற காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 21 வயது மகன் பிரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இதனிடையே பிரசாந்த் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த மகாதேவன் என்பவரது மகள் தன்யா (18) என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அடுத்த ஆண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக பிரசாந்திடம் பேச, தன்யாவிற்கு தனது செல்போனை மகாதேவன் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று தன்யாவின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு நள்ளிரவில் வாழ்த்து கூற பிரசாந்த் தனது நண்பர்களான தரணி பிரசாத், குணசேகரன் மற்றும் அபிஷேக் ஆகிய மூவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நான்கு பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. நள்ளிரவு 12 மணியளவில் தன்யாவின் வீட்டுக் கதவை பிரசாந்த் தட்டியபோது, அவரது உறவினரும் டாக்ஸி ஓட்டுனருமான விக்னேஷ் (29) மற்றும் தன்யாவின் தந்தை மகாதேவன் (40) கதவை திறந்துள்ளனர். அப்போது பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரசாந்த் குடிபோதையில் இருந்ததால், விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார். 

Crime : கோவையில் காதலி கண்முன் காதலன் படுகொலை.. பிறந்தநாள் வாழ்த்து சொன்னபோது நடந்த கொடூரம்..

இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த பிரசாந்தை அவரது நண்பர்கள் இரு சக்கர வாகனத்திலேயே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் தீர்ந்ததால், ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பிரசாந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரசாந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த செட்டிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தன்யாவின் உறவினரான கால் டாக்ஸி டிரைவர் விக்னேஷ் (29), மற்றும் அவரது தந்தை மகாதேவன் (40) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் வாழ்த்து கூற சென்ற காதலனை, காதலி கண் முன்னே அவரது உறவினர்கள் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLANDMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Breaking News LIVE: 48 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: 48 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்
Embed widget