மேலும் அறிய

Crime: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது - புகார் அளிக்காத ஆசிரியர்கள் மீதும் வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்த நான்கு பெண் ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை அரசு பள்ளியில் பயிலும் 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்த நான்கு பெண் ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

ஆசிரியைகள் மீதும் வழக்கு

அப்போது அந்தப் பள்ளியில் 7, 8, 9 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர் அவர்களிடம் பள்ளியில் 7 வது மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54) என்பவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் இது குறித்து வகுப்பு ஆசிரியரான கீதா மற்றும் ஷியாமளா உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, பட்டதாரி ஆசிரியை சண்முகவடிவு உள்ளிட்டோர் அதனை மூடி மறைக்கும் வகையில் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல் நிலையத்திலும், குழந்தைகள் நல அதிகாரிகளிடமும் அவர்கள் புகார் அளிக்காமல் இருந்து வந்ததாகவும், ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அப்பள்ளியில் பயிலும் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முகவடிவு, கீதா, ஷியாமளா ஆகியோர் இச்சம்பவத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து பள்ளி மாணவிகள் 9 பேரை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜமுனா, ஆசிரியைகள் கீதா, ஷியாமளா, சண்முகவடிவு ஆகியோர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
Embed widget