மேலும் அறிய

தமிழ் புத்தாண்டு: பலவகை பழங்களுடன் ஈஷாவில் விமர்சையாக கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல வகையான பழங்களை தேவிக்கு கிராம மக்கள் அர்ப்பணித்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல வகையான பழங்களை தேவிக்கு கிராம மக்கள் அர்ப்பணித்தனர்.

தமிழ் மாதத்தின் படி, சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் தமிழ் பேசும் மக்களால் தமிழ் புத்தாண்டு, ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிப்பட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.

சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்தி பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.


தமிழ் புத்தாண்டு: பலவகை பழங்களுடன் ஈஷாவில் விமர்சையாக கொண்டாட்டம்!

இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என கடந்த மஹாசிவராத்திரி அன்று சத்குரு அவர்கள் கூறினார். அதன் ஒரு பகுதியாக, ஆதியோகி முன்பு தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் திரு.சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாக பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை திரு. ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்னாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்னாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்தி பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகுந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டு: பலவகை பழங்களுடன் ஈஷாவில் விமர்சையாக கொண்டாட்டம்!

ஈஷா மையம் சிறப்புகள்:

ஈஷா யோகா மையமானது தன்னை ஒரு மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத, பொதுத் தொண்டு ஆன்மீக அமைப்பு என்று அடையாளப்படுத்துகிறது. இது 1992 இல் இந்தியாவின் கோயம்புத்தூர் அருகே சத்குரு ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்ட நிறுவனமாகும். தற்போது உலகளவில் 150 மையங்களைக் கொண்டு மனிதநேய அமைப்பாக திகழும் இந்த அமைப்பு, நாடு மற்றும் கலாச்சாரம் போன்ற எல்லைகள் தாண்டி இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த மையம், நுணுக்கமான கட்டிடக் கலைகள் கொண்ட 64,000 சதுர அடி பரப்பளவுள்ள 'ஸ்பந்தா ஹால்' மற்றும் ஆதியோகி ஆலயம் என்னும் தியான மண்டபங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் தியானலிங்கம், தீர்த்தகுண்டம், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா ஹோம் ஸ்கூல், மற்றும் குடும்ப சூழ்நிலையில் வாழ்வோருக்கான வானப்பிரஸ்தா குடியிருப்புகள் ஆகியவையும் யோக மையத்தில் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
VinFast VF5: சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
Embed widget