மேலும் அறிய

Savukku Shankar கைது, கைது, கைது… அடுத்தடுத்த வழக்குகளில் அதிரடியாக கைதாகும் சவுக்கு சங்கர்..! ; முழு விபரம் இதோ..!

சவுக்கு சங்கர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அங்கும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த வழக்கிலும்  கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்திருந்தனர்.

5 வழக்குகளில் கைது

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் கொடுத்திருந்த புகாரின் பேரில் சென்னை காவல் துறையினர் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். இதே போல தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவரும் சென்னை காவல் துறையினரிடம் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரிலும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில், இந்த இரண்டு வழக்குகளிலும் சென்னை காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இந்த இரு வழக்குகளிலும் கைது செய்ததற்கான உத்தரவினை சென்னை காவல் துறையினர் சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.

Savukku Shankar கைது, கைது, கைது… அடுத்தடுத்த வழக்குகளில் அதிரடியாக கைதாகும் சவுக்கு சங்கர்..! ; முழு விபரம் இதோ..!

இதுவரை ஐந்து வழக்குகளில் யூ டியுபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சென்னை வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ரிமாண்ட் செய்ய சென்னை அழைத்து வராமல்,  கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திலேயே ஆஜர்படுத்தி ரிமாண்ட் பெற்று கொள்ள சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே இந்த இரு வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்திலேயே ரிமாண்ட் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் சிகிச்சைக்காக உத்தரவை நேற்று பிறப்பித்தது. இந்த சூழலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த சவுக்கு சங்கருக்கு வீல் சேரில் அமர்ந்து அழைத்துச் செல்ல செவிலியர்கள் அறிவுறுத்திய போது, நான் நடந்து வருகிறேன் என தெரிவித்துக் கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றார். வலது கையில் முறிவு ஏற்பட்டதா? எந்த மாதிரி காயம் உள்ளது? என முதலில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்பட்டது. இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் ஐந்து நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AFG Live Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
IND vs AFG Live Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG Live Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
IND vs AFG Live Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
Breaking News LIVE: விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
Embed widget