மேலும் அறிய

பறக்கும் படையினர் நடத்திய 'தங்க' வேட்டை... கோவை சிக்கிய 10 கோடி மதிப்புள்ள தங்கம்

கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 10.18 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்.

கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா அருகே பறக்கும் படை அதிகாரி சாமிநாதன் தலைமையில் போலீசார் நேற்று பிற்பகல் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த பார்சல்களில் அதிகளவில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வாகனத்தில் இருந்தவர்களிடம் அதற்கான உரிய ஆவணங்கள் குறித்து கேட்டபோது, அவர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, அந்த வாகனம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அந்த நகைகள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும், கோவையில் உள்ள நகைக்கடைகளுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், 6 கிலோ தங்க நகைகள், 8.5 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 10.18 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் துணை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கோவை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளில் மொத்தம் ரூபாய் 30 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Embed widget