மேலும் அறிய

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; வீடியோக்கள் குறித்து விசாரணை எனத் தகவல்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2019ம் ஆண்டு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு, அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது. 9 பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், பெண்கள் கடத்தல், ஆபாச வீடியோ பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துங்கள் உள்ளிட்ட 10 சட்டப் பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. 8 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; வீடியோக்கள் குறித்து விசாரணை எனத் தகவல்

இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. நீண்ட மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கைது செய்யப்பட்டவர்கள் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரையும் காவல் துறையினர் நேரில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள வீடியோக்களை வழக்கறிஞர் முன்னிலையில் ஒளிபரப்பு செய்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து, கோவை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். பின்னர் சேலம் சிறைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்த காவல் துறை வாகனம் கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து உரையாடினர். முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கி சென்றது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றால், முறையாக நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்களைப் பார்க்க அனுமதித்தது சேலம் காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சலுகை அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து கைதானவர்களுக்கு சலுகை காட்டிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் கைதானவர்கள் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பரஸ் மூலம் ஆஜர்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
கோவை வந்த முதல்வர் விஜய்: பார்க்க முடியாமல் சிறுவன் ஏமாற்றம்; மற்றொரு குழந்தைக்கு உதவ உறுதியளித்த விஜய்!
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
CM Vijay: முதல்வரின் கேரள பயணம் திடீர் ரத்து.. சென்னை திரும்பும் விஜய்.. என்ன காரணம்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – அடுத்த மாதம் தொடங்கும் பணிகள்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – தொடங்கும் பணிகள்?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Embed widget