மேலும் அறிய

கோடநாடு வழக்கில் கைதான தனபாலுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு!

மீண்டும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்த நிலையில், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீ தரன் அனுமதியளித்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு வழக்கில் கைதான தனபாலுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு!

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து  ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோடநாடு வழக்கில் கைதான தனபாலுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு!

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி,  சதீசன், பிஜின் குட்டி ஆகிய 6 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேரிடம் இதுவரை நடத்தப்படவில்லை. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு வழக்கில் கைதான தனபாலுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு!

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் (44) மற்றும் அவரது உறவினர் ரமேஷ் (34) ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளைச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு பின்னர் முதல் முறையாக இருவர் கைது செய்யப்பட்டனர். தனபால் மீது சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 5 நாட்கள் தனபாலை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு அனுமதி அளித்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இந்நிலையில் 5 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில், உதகை மகிளா நீதிமன்றத்தில் தனபாலை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். மீண்டும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்த நிலையில், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீ தரன் அனுமதியளித்து உத்தரவிட்டார். இதேபோல ரமேஷின் காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியை காவல் துறையினர் நீடிப்பார்கள் என தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget