மேலும் அறிய

கோவையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்... கோடிக்கணக்கில் மதுபானங்கள் இருப்பு...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். மேலும், 50 பார்களும் மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் சார்பில் கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபானங்களின் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதற்கு முன்பு மொத்தம் 254 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாகவும், அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல் நாளில் 4 கடைகளும், இரண்டாம் நாளில் 10 கடைகளும் மூடப்பட்ட நிலையில், நேற்று மீதமுள்ள 55 கடைகளும் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டன. இந்நிலையில், மூடப்பட்ட கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டம் நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் தெற்கு என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. வடக்கு பிரிவில் 156 கடைகளும், தெற்கு பிரிவில் 128 கடைகளும் இருந்தன. தற்போது வடக்கில் 48 கடைகளும், தெற்கில் 21 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி மாவட்டத்தில் 215 கடைகள் மட்டுமே செயல்படும்” என்றனர்.

மேலும், மூடப்பட்ட கடைகளுடன் இணைந்து இயங்கி வந்த 50 பார்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஒவ்வொரு கடையிலும் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மதுபான இருப்புகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர், இருப்பில் உள்ள மதுபானங்கள் அனைத்தும் பீளமேட்டில் உள்ள மண்டல டாஸ்மாக் கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget