நீலகிரி: கனமழை, காற்று - சுற்றுலா தலங்கள் மூடல்! ரயில் சேவை ரத்து! பயணிகளுக்கு எச்சரிக்கை!
காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும், இதன் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும், இதன் காரணமாக நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, அக்டோபர் 24ம் தேதி நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
இன்று, பலத்த காற்று வீசியதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில முக்கிய சுற்றுலாத் தலங்களை மூடினர். தொடர் மழையால், உதகமண்டலத்தில் உள்ள தொட்டபெட்டா, பைன் ஃபாரஸ்ட், 8வது மைல் ட்ரீ பார்க், அவலாஞ்சி மற்றும் கெய்ர்ன் ஹில் போன்ற சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இந்த இடங்களில் உயரமான மரங்கள் அதிகம் இருப்பதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கூடலூரில், இன்று பிற்பகல் 3 மணி முதல் லேம்ப்ஸ் ராக் போன்ற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், சேலம் ரயில்வே கோட்டம், மலை ரயில் சேவையை தொடர்ந்து நான்காவது நாளாக ரத்து செய்துள்ளது.நீலகிரி மலை ரயில் பாதையில் மழை தொடர்வதால், சரிந்த மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி மெதுவாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவும் மண் சரிவு மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து வருகின்றன என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மழை NMR பாதையில் தொடர்வதால், சரிந்த மண் மற்றும் பாறைகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணி மெதுவாக முன்னேறி வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக மண் சரிவுகளும் பாறைகளும் தண்டவாளத்தில் விழுந்து வருகின்றன. மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை, சில்குரோவ் மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவு மற்றும் தண்டவாள சேதம் காரணமாக, இன்று நான்காவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம், சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் சேவை மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி முதல் இந்த மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவுகள் காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சேதங்களை சரிசெய்யும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.





















